திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் சனிக்கிழமை (22.11.2025) காலை இடம்பெற்றது.

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 800 க்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் சம்பூர் பிள்ளையார் ஆலய முன்றலில் மாலை அணிவிக்கப்பட்டு, மேளதாளங்களோடு,மலர்தூவி விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
- Tamil National Heroes Week began (21.11.2025) with a commemoration ceremony at Jaffna University.
- தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், வேட்பாளர்கள் கோடிக்கணக்கான 500 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்துள்ளனர், அதனால் மக்களிடையே அதிக புழக்கம் இல்லை.
- மலையகத் தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு பிரிட்டன் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமையைக் கொண்டுள்ளது என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
- ”விஜயை பார்த்து திமுகவினர் பயப்படுகின்றனர்.” – அண்ணாமலை.
- இலங்கையில் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 838 சந்தேகநபர்கள் கைது
- 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள் – பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி சுடரேற்றப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அடுத்து மாவீரர்களின் பெற்றோர்களுக்கு தென்னை மரக்கன்றுகள், அன்பளிப்பு பொருட்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ் கௌரவிப்பு நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்,குடும்ப உறுப்பினர்கள்,அரசியல்வாதிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.