அமிழ்து
www.amizhthu.com
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

முதன்மை செய்திகள்

இலங்கை

இலங்கை பிரீமியர் லீக் ஆட்ட நிர்ணயம்: பாகிஸ்தான் நாட்டவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது!

by Amizhthu 22 November 2025
written by Amizhthu

2024 ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் ( LPL ) கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற ஆட்ட நிர்ணயம் தொடர்பில் தம்புள்ளை தண்டர்ஸ் (Dambulla Thunders) கிரிக்கெட் அணியின் முகாமையாளரான பாகிஸ்தான் பிரஜைக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு வெள்ளிக்கிழமை (21.11.2025) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2024 LPL கிரிக்கெட் தொடரின் போது ஆட்ட நிர்ணயம் செய்ய கிரிக்கெட் வீரர்களை தூண்டியதாக தம்புள்ளை தண்டர்ஸ் (Dambulla Thunders) கிரிக்கெட் அணியின் முகாமையாளரான பாகிஸ்தான் பிரஜைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.

குறித்த பாகிஸ்தான் பிரஜை, இது தொடர்பான விசாரணைகளுக்காக விளையாட்டு குற்றங்களைத் தடுப்பதற்கான பொலிஸ் பிரிவில் முன்னிலையாகாமல் இருப்பதால், அவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளின் அறிக்கையை டிசம்பர் 5 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களில், தென் மாநில உணவுகளை இலவசமாக வழங்க உள்ளதாக, ‘ஏர் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது.

by Amizhthu 22 November 2025
written by Amizhthu

சென்னை, மும்பை, டில்லி, கொல்கட்டா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களில், தென் மாநில உணவுகளை இலவசமாக வழங்க உள்ளதாக, ‘ஏர் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை-யில் இருந்து துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களில், தென் மாநில உணவுகள் இலவசமாக வழங்கப்படும்.

தென் மாநில உணவுகளில் குறிப்பாக, தமிழகத்தின் மிளகாய் பொடி இட்லி, முந்திரி உப்புமா, மினி மைசூர் மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி ஆகியவை வழங்கப்படும்.

இது மட்டுமின்றி, பிரியாணி, மலபாரி சிக்கன் கறி, சிக்கன் பிம்பாப் மற்றும் வட மாநில சைவ, அசைவ உணவுகள், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உணவுகள், ஜப்பான் நாட்டு உணவுகளும் வழங்கப்படும்.

பயணியர் விமான டிக்கெட் புக்கிங் செய்யும்போது, சைவமா அல்லது அசைவமா என்பதை தேர்வு செய்து கொள்ளலாம். முதல் கட்டமாக, சர்வதேச விமானங்களில் மட்டும் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது; பயணியரின் வரவேற்பை பொறுத்து, உள்நாட்டு விமான சேவையிலும் சேர்க்கப்படும். – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

தெல்லிப்பழைச் சந்தியில் மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.

by Amizhthu 22 November 2025
written by Amizhthu

மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (21.11.2025) ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி  வடக்கில் தெல்லிப்பழைச் சந்தியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டு , அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த நினைவாலயத்தில் வெள்ளிக்கிழமை (21.11.2025) மாலை தேச விடுதலைக்காக மூன்று மாவீரர்களின் தந்தையான மகேந்திரம் பொது நினைவுச்சுடரை ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மண்ணுக்காக உயிர்நீத்த வீரமறவர்களுக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் 27 ம் திகதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நினைவேந்தல் இடம்பெறவுள்ளதுடன் 26 ம் திகதி மாலை 6.00 மணிக்கு மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்னர். 

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சுமார் 550 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்.

by Amizhthu 22 November 2025
written by Amizhthu

வரலாற்றில் முதல் முறையாக சுமார் 350 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 200 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரச மருந்து தயாரிப்பு கூட்டுத்தாபனத்தால் புதிதாக சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் மருந்து வகைகளை, அறிமுகப்படுத்தும் நிகழ்வொன்று அண்மையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றிருந்தது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போது சுகாதார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுமார் 350 மருந்து வகைகளுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நாட்டு மருந்து விநியோகத் துறையில் இது புதிய புரட்சியாகும். எதிர்வரும் நாட்களில் மேலும் 200 மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கு மருந்துகளுக்கான விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் உள்ளது.

எனினும் 2023 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு விசாரணை காரணமாக அவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தனியார் மருந்தகங்களில், மருந்து வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். ஆகையால் மருந்துகளுக்கான விலையை நிர்ணயிப்பதற்கான புதிய வர்த்தமானி அறிவிப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

தற்போது மருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை தொடர்பில் மருந்து இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை நோய்கள், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்துகளுக்கு இவ்வாறு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு சர்வதேசதர நிலைகளுக்கு ஏற்றவாறு, தரமான மற்றும் பாதுகாப்பான மருந்துகளை தயாரித்து, மலிவான விலையில் அவற்றை விநியோகிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரச மருந்து தயாரிப்பு கூட்டுத்தாபனத்தினால், இவ்வருடம் பல மருந்துகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

மாவீரர் குடும்ப உறவுகள் மதிப்பளித்தல் நிகழ்வு கொக்கட்டிச் சோலை

by Amizhthu 22 November 2025
written by Amizhthu

“கடந்தகாலத்தில் தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பில் இந்த அனுரகுமார திசாநாயக்க போன்றவர்கள் வாய்மூடிகளாகவேயிருந்தனர்.” இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்களை ஊக்குவிப்பவர்களாகவே கடந்தகாலத்தில் இன்றைய தேசிய மக்கள் முன்னணியினர் இருந்தனர் என தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

1990 ஆண்டு பிரேமதாச பதவியேற்றபோது வடக்கிற்கு சுயாட்சி தருகின்றோம் கிழக்கினை விடுங்கள் என தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனிடம் அவர் கோரியபோது இல்லை,வடகிழக்கு தான் தமிழர்கள் தாயகம் என்று கூறி அதனை மறுத்த காரணத்தினால் போர் மீண்டும் மூண்டது எனவும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கனடா வாழ் உறவுகளின் பேராதரவுடன் மாவீரர் பெற்றோர்கள், மாவீரர் குடும்ப உறவுகள் மதிப்பளித்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (21.11.2025) கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள், மாவீரர் பெற்றோர்கள், குடும்ப உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மாவீரர் பெற்றோர்கள் குடும்ப உறவுகள் மங்கல வாத்தியங்கள் சகிதம் அழைத்து வரப்பட்டதுடன், தமிழ் மக்களின் அடிப்படை உரிமை மற்றும் அரசியல் அபிலாசைகளை முன்நிறுத்தி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் முகமாக இரண்டு மாவீரர்களை ஈன்ற தாய் ஒருவரால் பிரதான ஈகைச் சுடரேற்றப்பட்டது.

தொடர்ந்து வருகை தந்த பெற்றோர்களால் கண்ணீர்மல்க தன் மாவீரச் செல்வங்களை நினைத்து ஈகைச் சுடர்களை ஏற்றினர். பின்னர் மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர், மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு விருந்தோம்பும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன், பழமரக் கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Video News - காணொளி செய்திகள்

மாவீரர் நாள் சிறப்பு வெளியீடு 2025 பிரித்தானியா

by Amizhthu 21 November 2025
written by Amizhthu

மாவீரர் நாள் சிறப்பு வெளியீடு 2025 பிரித்தானியா

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
21 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

பௌத்த மயமாக்கல் வெல்லாவெளியில் வெடித்த போராட்டம்

by Amizhthu 21 November 2025
written by Amizhthu

தொல்பொருள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட 35 ஆம் கிராமம் கண்ணபுரம், கிராமத்தில் உள்ள வீதியில் தொல்லியல் இடமாக அங்கிகரித்து பெயர் பலகை நடுவதற்கு வெள்ளிக்கிழமை (21.11.2025) வருகை தந்த தொல்லியல் திணைக்களத்தினரை போரதீவுப் பற்றுப் பிரதேசசபையின் தவிசாளர் உள்ளிட்ட குழுவின் அவ்விடத்திற்கு விரைந்து வருகை தந்த தொல்பொருள் திணைக்களத்தினரை துரத்தியடித்தியுள்ளர்.

இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரதேச வெல்லாவெளியில் அமைந்துள் பிரதேச செயலகத்திற்குச் சென்ற மக்கள் பிரதே சபைத் தவிசாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட குழுவினர் அற்கு நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் கலைந்து சென்றனர். இதன்போது கருத்தத் தெரிவித்த போரதீவுப் பற்றுப் பிரதெ சபையின் தவிசாளர் வி.மதிமேனன்.

போரதீவுப் பற்றுப் பிரதேச சபைக்கு உட்பட்ட வேத்துச்சேனை, கண்ணபுரம், மற்றும் விவேகானந்தபுரம், ஆகிய கிராமங்களுக்கு தொல்லியல் திணைக்களம் என்ற பெயரிலே மூன்று உத்தியோகத்தர்கள் தொல்லியல் பொருட்கள் இருப்பதாக தெரிவித்து அடையாளப்படுத்தி பல பதாகைகளை இடுவதற்காக எமது பிரதேசத்திற்கு வந்திருந்தனர்.

இந்த நிலையில் எமது பிரதேச சபை உறுப்பினர்கள் இப்பிரதேச பொது அமைப்புக்கள் பொதுமக்கள் அயல் பிரதேசமான மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து இவ்வாறு தொல்லியல் இடம் என அடையாளப்படுத்தும் இடுப்பதற்காக வருகை தந்திருந்த அதிகாரிகளை எதிர்த்து இவை தொல்லியல் இடம் இல்லை என்பதை நாங்கள் தெரிவித்து இருந்தோம்.

தொல்லியல் திணைக்களத்தினால் 24 இடம் இருப்பதாக தெரிவித்திருந்தார்கள் தற்போது கூறுகின்றார்கள் 34 இடம் இருப்பதாக கூறுகின்றார்கள். அவற்றுக்குரிய பதாகைகளை நடுவதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார்கள் அந்த வகையில் அதற்கு எமது மக்களுடன் சேர்ந்து நாங்கள் பாரிய எதிர்ப்பினை நாங்கள் தெரிவித்தோம்.

வடகிழக்கிலே தமிழர்களுக்கு பாரி அச்சுறுத்தலாக வன பாதுகாப்புத் திணைக்களமும் தொல்லியல் திணைக்களமும் காணப்படுகின்றன. அதுபோன்றுதான் அண்மையில் திருவோணமலையிலும், புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கிலே பௌத்தமயமாக்கல் நடவடிக்கை தேசிய மக்கள் சக்தி என்ற பெயரிலே வந்த அரசாங்கம் முன்னர் ஜேவிபியினுடைய கொள்கையை பின்பற்றி வந்துள்ள அரசாங்கம் பலாத்காரமாக தமிழர்கள் வாழும் பகுதியிலே தொல்லியல் இடங்கள் இருக்கின்றது என்பதை தெரிவித்து இனங்களுக்கிடையிலான இன முரண்பாட்டை தோற்றுவித்து எமக்குள்ளே ஓர் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள்.

அந்த வகையில் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நாங்கள் கூறிக் கொள்வது யாதெனில் எங்கள் வடகிழக்கிலே இருக்கின்ற தமிழ் மக்களை நீங்கள் குழப்ப முடியாது. எப்போதும் நாங்கள் எமது சமய புராண பூர்வீக நிலத்தை நாங்கள்தான் ஆள வேண்டும் நீங்கள் உங்களுடைய பௌத்த மயமாக்கல் என்பதை தொல்பொருள் திணைக்களத்தை வைத்து எமது நிலங்களை அபகரிக்க கனவிதும் நினைக்க கூடாது என்பதை நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த காலத்தில் சில தமிழ் மக்கள் விட்ட தவறினால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் தேசிய மக்கள் சக்தியின் ஊடாக உருவாக்கி இருக்கின்றார். பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்கள் உருவாகி இருக்கின்றார்கள் எதிர்வரும் காலங்களில் தேசிய மக்கள் சக்தி ஜேவிபி போன்ற கட்சிகளுக்கு தமிழ் மக்கள் மீண்டும் வாக்களித்து அவர்களை பாராளுமன்றத்துக்கோ மாகாண சபைக்கோ உள்ளுராட்சி சபைகளுக்கோ இனியாவது அனுப்பாமல் விட்டு எமது தமிழ் மக்களின் நிலங்களை பாதுகாப்பதற்கு எமது தமிழரசுக் கட்சிதான் என்றும் கடைசி வரைக்கும் நிற்கும் என்பதை நான் கூறிக் கொள்கின்றேன்.

இன்றைய தினம் இந்த செயற்பாட்டுக்காக நாம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு பிரதேச செயலாளருடன் உரையாடி உள்ளோம். எங்களுடைய தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளில் பொது அமைப்புகளின் எதுவி சம்பந்தங்களும் இல்லாமல் எந்தவித கலந்துரையாடலும் இல்லாமல், தாங்கள் நினைத்தபடி பலாத்காரமாக அணுகி எதையும்சாதித்துவிட முடியாது. மக்களின் பலத்தினால் நாம் அவர்களின் அணுக்கலை நாம் இன்று முறியடித்து இருக்கின்றோம்.

எனவே தொல்லியல் திணைக்களத்தினர் முதன் முதலில் பொதுமக்களுடன் கலந்துரையாட வேண்டும் பிரதேச சபையினுடைய வீதியிலே பதாகைலையோ எதுவிலோ வேலை திட்டங்களோ மேற்கொள்ளும் போது பிரதேச சபையின் அனுமதியைப் பெற வேண்டும். எமது பிரதேசத்தில் அடையாளப்படுத்தி அவர்கள் அடையாளப்படுத்தி இருக்கும் 34 பிரதேச இடங்களுக்கும் சென்று அங்கிருக்கின்ற பொது அமைப்புகளுடன் கலந்துரையாட வேண்டும் அதன் பின்னர் தான் தொல்லியல் இடம் என்ன அடையாளப்படுத்தி பதாகைகளை இடவேண்டும் போன்ற தகவல்களை நாம் முன் வைத்திருக்கின்றோம் என இதன்போது போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசானர் வி.மதிமேனன் தெரிவித்தார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
21 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Video News - காணொளி செய்திகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரித்தானியா

by Amizhthu 21 November 2025
written by Amizhthu

எங்கள் சூரியப் புதல்வர்கள்
தங்கள் உயிர்களை
எம் தேசத்திற்காய் உவந்தளித்தவர்

இன்றோ!
தொலை வானில் செந்நிறமாய்
தேசியக்கொடியில் சுடராக எரிந்து
எமக்கான வல்லமை தருகின்றார்.

செங்காந்தள் மலரும்
செங்களமாடிய புனிதரின் கனவுகளை
சுமந்து சொரியட்டும்.

களத்திடை வீரர் சுமந்த கனவுகளை
வென்றாகி
தமிழீழம் மீட்பது இளையோரின் உரிமையும் கடமையும்.

TYO-UK – TCC.UK

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
21 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு தீவகம்

by Amizhthu 21 November 2025
written by Amizhthu

நேரம் : காலை 9.30 மணி
காலம் :- 22.11.2025 (சனிக்கிழமை
இடம் :- திறந்த வெளி அரங்கு, ஊர்காவற்றுறை பிரதேசசபை (ஊர்காவற்றுறை நகர்)

எம் இனத்தின் வாழ்விற்காக தம்முயிரை ஆகுதியாக்கிய எம் மறவர்களின் பெற்றோர் உரித்துடையோராகிய உங்களை மதிப்பளிப்பதையிட்டு நாம் பேருவகை கொள்கிறோம்.

மதிப்பளிப்புக்கு உங்களை அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.

என்றும் உம் உறவுகளின் தியாகத்துடன் எம் பணி செய்வோம்

நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு சாட்டி
மாவீரர் துயிலுமில்லம்
தீவகம்

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
21 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
சர்வதேசச் செய்திகள்

துபாய் விமானக் கண்காட்சியில் இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளானது, பார்வையாளர்கள் அதிர்ச்சியில் விமானி கொல்லப்பட்டார்

by Amizhthu 21 November 2025
written by Amizhthu

சம்பவத்தின் விவரங்கள்

ஒற்றை எஞ்சின் கொண்ட தேஜாஸ் விமான நிலையத்திற்குள் தரையில் திடீரென குதிப்பதற்கு முன்பு விமானத்தின் நடுவில் கட்டுப்பாட்டை இழந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். மோதலில் ஜெட் தீப்பிடித்து எரிந்ததை கிராண்ட்ஸ்டாண்டில் கூடியிருந்த குடும்பங்கள் மற்றும் விமான ஆர்வலர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். “தீயணைப்பு மற்றும் அவசரகால குழுக்கள் சம்பவத்திற்கு விரைவாக பதிலளித்தன, தற்போது அந்த இடத்திலேயே நிலைமையை நிர்வகித்து வருகின்றன” என்று துபாய் ஊடக அலுவலகம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

“விபத்தில் விமானிக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டன. உயிர் இழப்புக்கு IAF ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது மற்றும் இந்த துயர நேரத்தில் துயரமடைந்த குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்படுகிறது.”

விமானத்தின் பின்னணி

தேஜாஸ் என்பது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உருவாக்கிய இந்தியாவின் உள்நாட்டு இலகுரக போர் விமானமாகும். பல்துறைத்திறனுக்காக வடிவமைக்கப்பட்ட இது, தாக்குதல் விமான ஆதரவு, நெருக்கமான போர் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளுக்கு திறன் கொண்டது. இந்தியா சமீபத்தில் அதன் கொள்முதல் திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளது, செப்டம்பர் 2025 இல் 97 கூடுதல் தேஜாஸ் ஜெட் விமானங்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது, விநியோகங்கள் 2027 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான ஆய்வாளர் அம்ரிதா நாயக், தேஜாஸ் அதன் சுறுசுறுப்பு மற்றும் மேம்பட்ட விமானப் பயணங்களுக்காகப் பாராட்டப்பட்டாலும், “விமானக் கண்காட்சி ஆர்ப்பாட்டங்களில் விமானங்களை அவற்றின் வரம்புகளுக்குத் தள்ளும் அதிக ஆபத்துள்ள சூழ்ச்சிகள் அடங்கும், மேலும் நிரூபிக்கப்பட்ட தளங்கள் கூட அத்தகைய நிலைமைகளின் கீழ் பேரழிவு தோல்விகளை எதிர்கொள்ளக்கூடும்” என்று குறிப்பிட்டார்.

பரந்த சூழல்

2024 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த ஒரு சம்பவத்தில் விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குள் இது இரண்டாவது தேஜாஸ் விபத்து ஆகும். உள்நாட்டு போர் விமான உற்பத்தியில் முதலீடு செய்வதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை நம்பியிருப்பதைக் குறைக்க முயன்ற இந்தியாவின் பாதுகாப்பு விமானப் போக்குவரத்துத் திட்டத்திற்கு துபாய் விபத்து ஒரு முக்கியமான கட்டத்தில் வருகிறது.

சர்வதேச விமானக் கண்காட்சிகளில் வான்வழி காட்சிகளின் உள்ளார்ந்த அபாயங்களை இந்த சோகம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, அங்கு இராணுவ விமானங்கள் பெரும்பாலும் தீவிர சூழ்ச்சிகளின் கீழ் காட்சிப்படுத்தப்படுகின்றன. இது பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் உலகளாவிய அரங்கில் மேம்பட்ட திறன்களை நிரூபிப்பதன் அழுத்தங்கள் பற்றிய கேள்விகளையும் எழுப்புகிறது. இந்தியா தனது தேஜாஸ் கடற்படையை தொடர்ந்து விரிவுபடுத்துவதால், விசாரணையின் முடிவை பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் சர்வதேச கூட்டாளிகள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
21 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கை வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு – மன்னார் மக்களுக்கு எச்சரிக்கை.

by Amizhthu 21 November 2025
written by Amizhthu

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய நாளை சனிக்கிழமை (22.11.2025) தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் ஒன்று உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், ஏற்படுகின்ற அனர்த்தங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்தார்.

மன்னார் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (21.11.2025) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் இதுவரை குறைந்த அளவு மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது. எனினும் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது. எனினும் குறித்த மழைவீழ்ச்சி காரணமாக மாவட்டத்தில் எவ்வித அனர்த்தங்களும் பதிவாகவில்லை.

மன்னார் மாவட்டத்தில் பருவகால மழை தொடர்பாக மாவட்ட மட்ட மற்றும் பிரதேச மட்ட கூட்டம் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. குறித்த முன்னாயத்த கூட்டங்களின் போது வெள்ள அனர்த்த அபாயங்களை குறைப்பது தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பருவகால மழை காரணமாக ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தத்தை தடுப்பது தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் பல்வேறு திணைக்களங்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் உள்ளூராட்சி சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் ஏனைய திணைக்களங்கள் ஊடாக வடிகான்கள், கழிவு நீர் வாய்க்கால்கள் என்பன துப்புரவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் வெள்ள நீர் இலகுவாக கடலை சென்றடையக்கூடிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது உயர்தர பரீட்சை இடம்பெற்று வருகின்றன. எனினும் பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்கு எவ்வித அனர்த்தங்களும் ஏற்படவில்லை. சிறப்பான முறையில் பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன. அனர்த்த முகாமைத்துவ நிலையம் மன்னார் வலயக்கல்வி பணிமனையுடன் தொடர்பில் இருந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

மன்னார் முருங்கன் கட்டுக்கரை குளத்தில் தற்போது 9.4 அடி நீர்மட்டம் காணப்படுகின்றது. எனினும் குறித்த குளம் 11.56 அடி அளவிலேயே வான் பாய்வதற்கான நிலை ஏற்படும். இதுவரை மன்னார் மாவட்டத்தில் எவ்வித வெள்ள அனர்த்தங்களும் ஏற்படவில்லை.

தற்போது வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய சனிக்கிழமை (22) தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் ஒன்று உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறித்த காற்றழுத்த தாழமுக்கம் தொடர்ந்து 23, 24, 25ஆம் திகதிகளில் வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியை சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த காலப்பகுதியில் காற்று சுழற்சியாக மாற்றமடையும் என்றும் கூறப்படுகிறது.குறித்த காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும்,அவ்வேளையில் காற்றின் வேகம் உயர்வாக காணப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இக்காலப்பகுதியில் அனர்த்தங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மக்கள் விழிப்புடன், அவதானத்துடனும் இருக்குமாறும் வளிமண்டல திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

காற்றின் வேகம் அதிகரித்தால் கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே கடற்தொழிலில் ஈடுபடுகின்ற கடற்தொழிலாளர்கள், அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். காற்றழுத்த தாழமுக்கம் மற்றும் வெள்ளத்தினால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்பு கொள்ளவும்.

அத்துடன் 023-2117117 மற்றும் 023-2250133 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனும் அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவி பணிப்பாளரின் 077-2320529 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டால் அனர்த்தம் தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
21 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

சுதந்திரபுரம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு 

by Amizhthu 21 November 2025
written by Amizhthu

உடையார்கட்டு வடக்கு மற்றும் தெற்கு சுதந்திரபுரம் இருட்டுமடு மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

மாவீரர் நாளினை முன்னிட்டு முல்லை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் நெதர்லாந்து மக்களின் நிதிப்பங்களிப்புடன் புதுக்குடியிருப்பு பிரதேச மாவீரர் பெற்றோர்கள் 125 க்கு மேற்பட்டோர் பங்கேற்புடன் பொதுநோக்கு மண்டபத்தில்  (18.11.2025) அன்று காலை 11.00 மணியளவில்  ஆரம்பமானது.

முதல் நிகழ்வாக மூன்று மாவீரரின் தாயார் பொதுச்சுடரேற்ற, பொதுப் படத்திற்கான  மலர் மாலையினை மாவீரர்களின் பிள்ளைகள் அணிவித்து வைக்க மலர் வணக்கத்தினை 2 மாவீரரின் தந்தை ஆரம்பித்து வைக்க அதனை தொடர்ந்து பெற்றோர்கள் ஈகைசுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு உணர்வு  பூர்வமாக  நடைபெற்றது. அதன் பின் அகவணக்கம் செலுத்தப்பட்டது. 

பின் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் மாவீரர்களின் நினைவு சுமந்த  உரைகள்  உணர்வோடு வழங்கியிருந்தனர். தொடர்ந்து  தேனீர், சிற்றுண்டியும் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அனைவருடனும் கலந்துரையாடி இறுதியாக மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. உணர்வு பூர்வமான நிகழ்வு சிறப்பாக நடந்து நிறைவு பெற்றது.  இந்நிகழ்வில் முன்னாள் போராளிகள்,  பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவீரர்களின் உறவினர்கள், மக்களென பலர் உணர்வோடு கலந்துகொண்டிருந்தனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
21 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d