2024 ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் ( LPL ) கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற ஆட்ட நிர்ணயம் தொடர்பில் தம்புள்ளை தண்டர்ஸ் (Dambulla Thunders) கிரிக்கெட் அணியின் முகாமையாளரான பாகிஸ்தான் பிரஜைக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு வெள்ளிக்கிழமை (21.11.2025) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2024 LPL கிரிக்கெட் தொடரின் போது ஆட்ட நிர்ணயம் செய்ய கிரிக்கெட் வீரர்களை தூண்டியதாக தம்புள்ளை தண்டர்ஸ் (Dambulla Thunders) கிரிக்கெட் அணியின் முகாமையாளரான பாகிஸ்தான் பிரஜைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.
குறித்த பாகிஸ்தான் பிரஜை, இது தொடர்பான விசாரணைகளுக்காக விளையாட்டு குற்றங்களைத் தடுப்பதற்கான பொலிஸ் பிரிவில் முன்னிலையாகாமல் இருப்பதால், அவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- ஹார்முஸ் வியூகம்: ராஜதந்திரத்திற்கும் போருக்கும் இடைப்பட்ட 30 நாள் அவகாசம்
- Using the name “Karumpuli Miller” for a commercial film is an act of deep disrespect to Tamil martyrdom and history
- இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தனது உரையில், ’75 வருட சாபம்’ என்ற கருத்தை ஜனாதிபதி நிராகரித்தார்!
- மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது; இன்றிரவு கரையைக் கடக்கும்!
- இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான 2022 போராட்டங்களில் பங்கேற்றதாக நீதிமன்றம் கண்டறிந்த 12 பேருக்கு மரண தண்டனை!
- நேரலை LIVE🔴திலீபன் நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் !
இது தொடர்பான விசாரணைகளின் அறிக்கையை டிசம்பர் 5 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.