
இலங்கை அரசுக்கு எதிராக 2022ல் நடந்த போராட்டத்தில், பொதுஜன பெரமுனா கட்சி எம்.பி., அமரகீர்த்தி அதுகோரளே கொல்லப்பட்ட வழக்கில், 16 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அதில், 12 பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இலங்கையில் கடந்த 2022 ஜூலையில் கடுமையான பொருளாதார நெருக்கடி, எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் நாடு முழுதும் மக்கள் போராட்டம் வெடித்தன.
போராட்டக்காரர்கள் தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு கைப்பற்றினர். இதையடுத்து, அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார்.
இந்த சம்பவங்களுக்கு முன்னதாக 2022 மே 9ல், அப்போதைய ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனாவின் எம்.பி., அமரகீர்த்தி அதுகோரளே, பொலன்னறுவா தொகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
அவரது வாகனம் கூட்டத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அவரையும், அவரது பாதுகாப்பு அதிகாரி ஜயந்த குணவர்தனேவையும் கடுமையாக தாக்கினர். இதில் இருவரும் உயிரிழந்தனர்.
- “இலவசங்களுக்கு நிதி இருக்கிறது, ஆனால் செவிலியர்களின் சம்பளத்திற்கு எதுவும் இல்லை ?” உச்ச நீதிமன்றம் தமிழக அரசிடம் நிதி முன்னுரிமைகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளது.
- ஒடிசாவில் ரூ.60 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த இந்திய பிரதமர் மோடி
- சம்பத் மனம்பேரி “நடராஜா ரவிராஜ் படுகொலை” விவகாரத்தில் சந்தேக நபரல்ல, அவர் சாட்சியாளர். – சாகர காரியவசம்.
- அம்மா படிக்க சொன்னதால், யாழ்ப்பாணத்தில் “15 வயது மாணவி” தவறான முடிவை எடுத்து தற்கொலை செய்து கொண்டார்!
- “இறந்தவர்களால் நீதிக்காகப் பேச முடியாது; நாம்தான் அவர்களுக்காகப் பேச வேண்டும்” – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன்
- “முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் சேவை நீட்டிப்பு வேண்டுமென்றே மறுக்கப்படவில்லை” – இலங்கை அரசு
இந்த வழக்கில் 41 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம், 16 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. அதில், 12 பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.