அமிழ்து
www.amizhthu.com
  • News in ENGLISH
  • தமிழீழம்
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • நாட்காட்டி
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

செய்திகள்

இலங்கை

இலங்கையில் மின்சார வேலியில் சிக்கி கணவன்-மனைவி உயிரிழந்தனர்.

by Amizhthu 15 January 2026
written by Amizhthu

கேகாலையில் வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுனுவல பகுதியில் உள்ள காணி ஒன்றில் மின்சார வேலியில் சிக்கி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (13-01-2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக காணியில் பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கியே கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹுனுவல, துல்ஹிரிய பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய கணவனும் 58 வயதுடைய மனைவியுமே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
15 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

by Amizhthu 15 January 2026
written by Amizhthu

குறித்த கைது நடவடிக்கையானது திங்கட்கிழமை (12-01-2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் புறநகரில் வசிக்கும் இளம் பெண் ஒருவரே தான் பணியாற்றிய நகைக் கடையில் சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட பெண்ணை வரும் ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (13-01-2026) உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் இயங்கும் பிரபல நகைக் கடைகளில் ஒன்றில் சுமார் ஒன்றரை வருடம் பணியாற்றிய பெண் 3 மாதங்களுக்கு முன்னர் தனக்கு ஜனவரி 21ஆம் திகதி திருமணம் என்று கூறி பணியிலிருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில் நகைக் கடையில் கணக்கெடுப்பில் சுமார் 2 கிலோ கிராம் தங்க நகைகள் காணாமல் போனமை அறியப்பட்டு ஆராயப்பட்ட போதே விடயம் கண்டறியப்பட்டு யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் நகைக் கடை முகாமைத்துவத்தினால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், இளம் பெண் ஒருவரை நேற்று கைது செய்துள்ளனர்.

அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் திருடப்பட்ட நகைகளை அடகு வைத்தும், விற்பனை செய்தும் நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்துள்ளதாகவும் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

சான்றுப்பொருள்களை மீட்கும் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
15 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின்சார கட்டணங்களில் திருத்தம் இல்லை – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம்

by Amizhthu 15 January 2026
written by Amizhthu

இலங்கை மின்சார சபையானது உரிய நேரத்தில் முறையான கட்டண திருத்த முன்மொழிவை சமர்ப்பிக்கத் தவறியதன் காரணமாக, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்தத்தை செயல்படுத்த போவதில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை கடந்த 2025 ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆணைக்குழு மின்சார சபைக்கு தெரிவித்திருந்தது. இருப்பினும், மின்சார சபை 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதியன்று 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான தனது முன்மொழிவை சமர்ப்பித்தது.

குறித்த திட்டத்தில் உள்ள குறைப்பாடுகள் காரணமாக, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதிக்கு முன்னர் முறையான முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்தது. திருத்தப்பட்ட முன்மொழிவை சமர்ப்பிப்பதில் மேலும் தாமதங்கள் ஏற்படும் என்று மின்சாரசபை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஆணைகுழுவிற்கு தெரிவித்தது. இன்றுவரை ஆணைகுழுவிற்கு திருத்தப்பட்ட கட்டண திருத்த முன்மொழி திட்டம் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும் கட்டண திருத்த முன்மொழி திட்டம் பெறப்பட்டவுடன், மதிப்பாய்வு மற்றும் பொது ஆலோசனைக்குப் பின்னர் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவடையும் காலத்திற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். காலாண்டில் குறுகிய காலத்திற்கு வருமானம் மற்றும் செலவினங்களில் ஏற்படும் மாற்றங்களை சரிசெய்வதன் மூலம் மின்சாரக் கட்டணங்கள் ஒப்பீட்டளவில் அதிக சதவீதத்தால் மாறக்கூடும் என்பது கவனிக்கப்பட்டுள்ளது. இது தேசிய பொருளாதாரத்தில் அதிக எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

சரியான காலப்பகுதியில் செல்லுபடியாகும் கட்டண திருத்தத்தை சமர்ப்பிக்காததாலும், காலாண்டின் குறுகிய காலத்திற்கு கட்டண திருத்தத்தை செயல்படுத்துவதாலும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதகமான தாக்கத்தை கருத்தில் கொண்டு, முதல் காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்தை செயல்படுத்த வேண்டாம் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம் செய்தது.

2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை எதிர்வரும் பிப்ரவரி மாதம் 13ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
15 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

பாடப்புத்தகங்களில் எவ்விடத்தில் ஆபாசமான விடயங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளது? சஜித் பிரேமதாச பகிரங்கமாக குறிப்பிட வேண்டும். – நளிந்த ஜயதிஸ்ஸ

by Amizhthu 15 January 2026
written by Amizhthu

பாடப்புத்தகங்களில் எவ்விடத்தில் ஆபாசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கமாக குறிப்பிட வேண்டும். இவ்விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவருடனோ அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனோ பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயார். முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மகாநாயக்க தேரர்கள் ஏற்றுக்கொண்ட தர்மச்சக்கரத்தை பயன்படுத்துவதா? அல்லது சஜித் பிரேமதாச, ரோஹிணி கவிரத்ன குறிப்பிடும் தர்மச்சக்கரத்தை பயன்படுத்துவதா? என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வியெழுப்பினார்.

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தெளிவுப்படுத்துகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கம் எடுக்கும் தீர்மானத்தை ஒரு தரப்பினர் எதிர்த்தாலும் அதனை செயற்படுத்த முடியும்.உதாரணமாக ஒரு இடத்தில் வீதியை அமைக்கும் போது ஒருதரப்பினர் எதிர்த்தால் பொது நலனை கருத்திற் கொண்டு அரசாங்கத்தால் எதிர்ப்புக்கு மத்தியில் அதனை செயற்படுத்த முடியும்.

கல்வி கொள்கை தொடர்பாக எடுக்கும் தீர்மானத்தை ஒருவழி பாதையில் மாத்திரம் செயற்படுத்த முடியாது. கல்வியில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உட்பட ஒட்டுமொத்த சமூகமும் தொடர்புப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை தொடர்பில் ஒரு தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மக்கள் மத்தியில் திரிபுப்படுத்தப்பட்ட வகையில் போலியான விடயங்களை முன்வைக்கும் போது அதனால் பெற்றோரில் ஒரு தரப்பினர் அவநம்பிக்கை கொண்டிருந்தால் அது குறித்து அரசாங்கம் என்ற அடிப்படையில் அவதானம் கொள்ள வேண்டும்.

கல்வி என்பது உணர்வுபூர்வமானது. நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்ற அதிகாரம் உள்ள காரணத்தால் இவ்விடயத்தில் தன்னிச்சையாக செயற்பட முடியாது. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் சந்தேகங்கள் களையப்பட வேண்டும் என்பதற்காகவே புதிய கல்வியில் ஒரு தொகுதியை மாத்திரம் 2027 ஆம் ஆண்டு அமுல்படுத்த ஜனாதிபதி தீர்மானித்தார். குறுகிய காலத்துக்குள் மக்களுக்கு உண்மையை தெளிவுப்படுத்துவோம்.கல்வித்துறையில் உள்ள சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் புதிய கல்வி கொள்கையை அமுல்படுத்துவதே எமது நோக்கம்.

தர்மச்சக்கர விவகாரம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன பாராளுமன்றத்தில் ஊடகச் சந்திப்பை நடத்தி ‘ 6 ஆம் தர ஆங்கில புத்தகத்தில் மாத்திரமல்ல பௌத்த மத புத்தகத்திலும் தர்மச் சக்கரம் தவறாக அச்சிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார்.நாட்டில் பௌத்த மதத்தை அழிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சித்தார்.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தர்மச்சக்கரம் தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு புத்தசாசன அமைச்சு திரிபீடக சபை ஊடாகவே 2024.08.29 ஆம் திகதியன்று தீர்வு கண்டது. மகாநாயக்க தேரர்கள், கல்வி அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு ஏற்றுக்கொண்ட தர்மச்சக்கரமெ புதிய பௌத்த மத பாடப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 2600 ஆவது சம்புத்த ஜயந்தி நிகழ்வின் போது பயன்படுத்தப்பட்ட தர்மச்சக்கரமே புதிய பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் திரிபுப்படுத்த வகையில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்.தர்மச்சக்கரம் தவறாக அச்சிடப்பட்டுள்ளது ஆகவே புதிய கல்வி கொள்கை வேண்டாம் என்று குறிப்பிடுகிறார்கள். சஜித் பிரேமதாச, ரோஹிணி கவிரத்னவின் தர்மச்சக்கரத்தை ஏற்றுக்கொள்வதா அல்லது மகாநாயக்க தேரர்கள் ஏற்றுக்கொண்ட தர்மச்சக்கரத்தை ஏற்றுக்கொள்வதா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும்.

பாடப்புத்தகத்தில் எவ்விடத்தில் ஆபாச விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன ?

கல்வித் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்தி கல்வி மறுசீரமைப்புக்கு 17,542 மில்லியன் ரூபா 2026 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் இலவச கல்வியை இல்லாதொழிக்கிறது. ஆபாச விடயங்களை உள்ளடக்கியுள்ளது.தன்பாலினத்தை ஊக்குவிக்கிறது என்று குறிப்பிட்டுக் கொண்டு விமல் வீரவன்ச கல்வி அமைச்சின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனையே எதிர்க்கட்சித் தலைவரும் மத்துகமையில் குறிப்பிட்டார்.

ஆறாம் தர ஆங்கில பாடப்புத்தகத்தில் 14 பாடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மொழி மற்றும் இலக்கிய பாடப்புத்தகத்தகத்தில் ‘ சிநேகபூர்வமான கலந்துரையாடல்’ என்ற பாடம் உள்ளடக்கப்பட்டுள்ளது.இதில் இரண்டு ஆண் பிள்ளைகள் உரையாடுவதையும் எதிர்க்கட்சியினர் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிப்பார்கள்.

பாடப்புத்தகங்களில் எவ்விடத்தில் ஆபாசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கமாக குறிப்பிட வேண்டும்.இவ்விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவருடனோ அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனோ பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயார். முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஆறாம் தர மாணவர்களுக்கு தகவல் மற்றும் தொழில்நுட்பத்தை கற்பிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது. ஏன் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தை கற்பிக்க கூடாது. போலியான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சியினர் முன்வைத்து தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தினார்கள்.

மாணவர்களுக் சுகாதாரத்தை முறையாக கற்பித்தால் தான் கர்ப்பக்குழாயை பிடித்து கர்ப்பத்தடை செய்ய முடியாது என்பதை அறிவார்கள். புவியியல் பாடத்தை முறையாக கற்பித்தால் தான் பூமியை பிளந்து பாம்பு வராது என்று அறிவார்கள்.புதிய கல்வி மறுசீரமைப்பை நிச்சயம் அமுல்படுத்துவோம். திட்டமிட்ட வகையில் நெருக்கடியை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
15 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

உயிருக்கு ஆபத்தான போதைப்பொருட்களின் பயன்பாட்டால் நம் நாட்டில் இளம் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. – ஆளுநர் வேதநாயகன்

by Amizhthu 15 January 2026
written by Amizhthu

உயிர்கொல்லி போதைப்பொருளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைத் தனித்து முப்படையினர் மற்றும் பொலிஸார் மாத்திரமே மேற்கொண்டுவிட முடியாது. இந்த நடவடிக்கையில் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும். அதன் மூலமே எங்கள் எதிர்காலச் சந்ததியைப் பாதுகாக்க முடியும், என வடக்கு மாகாணஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.

விஷ போதைப்பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மாவட்டச் செயற்பாட்டுக் குழுவை உருவாக்குவதற்கான கிளிநொச்சி மாவட்டக் கலந்துரையாடல் புதன்கிழமை (14-01-2026) காலை நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத் திறன்விருத்தி மண்டபத்தில், மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் கடற்றொழில் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் ஆகியோர் பிரதம விருந்தினராகப் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும், ஆளுநருமான நா.வேதநாயகன் தனதுரையில்,

எமது நாட்டில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையால் இளம் சமுதாயம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வளவோ குடும்பங்கள் தங்களின் வாழ்க்கையைத் தொலைத்துள்ளன.

அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில், இந்த உயிர்கொல்லி போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதுக்குத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாகவே பிரதேச மற்றும் மாவட்ட மட்டக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுகின்றன.

அதேவேளை, போதைக்கு அடிமையானவர்களை மீட்பதுக்குரிய செயற்றிட்டமும் அவசியமானது. வடக்கு மாகாணத்தில் இதற்கெனத் தனியான புனர்வாழ்வு நிலையம் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கே அனுப்பப்படுகின்றனர். அங்கும் போதிய இடவசதி இல்லாத நிலைமை காணப்படுகின்றது.

எனவே, எமது மாகாணத்தில் தனியானதொரு புனர்வாழ்வு நிலையத்தை அமைப்பதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஆளுநர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்ததாவது:

இன, மத பேதம் எதுவுமின்றி எமது பிள்ளைகள் இந்த உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

நாம் இதைக் கட்டுப்படுத்துவதுக்கு இரண்டு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். ஒன்று, நாட்டுக்குள் போதைப்பொருள் வருவதைத் தடுப்பதுக்குரிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.

இரண்டாவது, நாட்டுக்குள் போதைப்பொருளுக்கான கேள்வியைக் குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அதன் ஒரு கட்டமாகவே இவ்வாறான பிரதேச மற்றும் மாவட்டக் குழுக்களை நிறுவுகின்றோம்.

இவர்கள் ஊடாகப் பரந்துபட்ட விழிப்புணர்வுகளை மேற்கொள்வதன் மூலம் போதைப்பொருளுக்கான கேள்வியைக் குறைக்க முடியும். விநியோகத்தை நிறுத்தல் மற்றும் கேள்வியை இல்லாமல் செய்தல் ஆகிய வழிமுறைகள் ஊடாக இதைக் கட்டுப்படுத்த முடியும் என நாம் நம்புகின்றோம்.

உங்கள் பிள்ளைகள் போதைப்பொருளைப் பயன்படுத்தவில்லை என்பதற்காகப் பெற்றோர்களாகிய நீங்கள் மௌனமாக இருக்க வேண்டாம். இந்தத் தேசிய செயற்றிட்டத்தில் நீங்களும் இணைந்து கொள்வதன் ஊடாகவே, எந்தவொரு காலத்திலும் எங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க முடியும். ஆளுநர் குறிப்பிட்டதைப்போன்று முப்படையினர் மற்றும் பொலிஸாரால் மாத்திரம் இதனைக் கட்டுப்படுத்த முடியாது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். போதைப்பொருள் தொடர்பான தகவல்களை நீங்கள் இரகசியமாக வழங்க முடியும்.

அரசாங்கம் இவ்விடயத்தில் உறுதியாக உள்ளது. போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சுமார் 450 பொலிஸாரைக் கூட நாம் பணி நீக்கம் செய்துள்ளோம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் புனர்வாழ்வு நிலையத்தை நிறுவுவதுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம், என்றார். இதன் பின்னர் திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண சிரேஷட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மதத் தலைவர்கள், சமூகமட்டப் பிரதிநிதிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
15 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

உறவுகளை அஞ்சலிப்பதற்கு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவத்திடமிருந்து விடுவிக்க தீர்மானம் வேண்டும். – தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

by Amizhthu 15 January 2026
written by Amizhthu

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்திற்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பிரதேச அபிவிருத்திக் குழுவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இராணுவம் அங்கு முகாமிட்டிருப்பது உரிமை மீறலாகும். உறவுகள் அஞ்சலிப்பதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் வகையில் அக் காணியினை விடுவிக்க அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வலியுறுத்தினார்.

இராணுவத்தினரால் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் விடயத்தில், 19.42 ஏக்கர் நிலம் உரிமையாளர் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு – சுவிகரிப்பு தொடர்பான தற்போதைய நிலை அரச காணி (03.09.2014) இராணுவத்தினருக்குக் கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என செவ்வாய்க்கிழமை (13-01-2025) இடம்பெற்ற கோப்பாய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதனையடுத்து இவ்விடயத்தில் குறுக்கிட்டு பேசிய வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் , மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்தினருக்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை நாம் புதிதாக தற்போதே கேள்விப்படுகின்றோம்.

அது முன்னைய காலங்களில் இடம்பெற்றதாக தங்களால் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த இரகசிய தகவலை நாம் அறியும் நிலையில், நாம் அதனை கடுமையாக எதிர்க்கின்றோம்.

துயிலும் இல்லத்தில் எமது உறவுகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு மரணித்தவர்களை நினைவு கொள்ளும் உரிமை, அஞ்சலிக்கும் உரிமை எமது உறவுகளுக்கு கிட்டவேண்டும்.

இதற்கு பதிலளித்த அபிவிருத்திக் குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, இது 2014 ஆம் ஆண்டு இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். இதனையடுத்து குறுக்கிட்ட தவிசாளர் 2014 ஆம் ஆண்டு எந்த அடிப்படையில் கையளிக்கப்பட்டிருக்கின்றது? காணி கையளிப்பு சட்டங்கள் எவ்வாறு பின்பற்றப்பட்டன? எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அபிவிருத்திக்குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, மாவீரர் துயிலும் இல்ல நிலங்களை அரசாங்கம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். அது நடக்கும் என்றார். இராணுவம் இருக்கின்ற பெருமளவான காணிகள் விடுவிக்கப்படும் என்றார்.

தையிட்டி விகாரை கூட அவ்வாறு தான் என பதிலளித்தார். இதனை ஏற்றுக் கொள்ளாத தவிசாளர், இக் கூட்டத்தில் ஏன் இதில் இராணுவத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது. அவ்வாறான கருமங்கள் எதுவும் காணி பயண்பாட்டுக்குழு ஊடாக நடந்துள்ளதா என தவிசாளர் துருவித் துருவி வினா தொடுத்தார்.

இதற்கு பதிலளித்த பிரதேச செயலாளர் அது விடுவிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் என்றார். காணி உத்தியோகத்தர் பதிலளிக்கையில் சிறைச்சாலை திணைக்களத்திற்குச் சொந்தமான காணி அது 2014 இல் பாதுகாப்பப் படைகளுக்கு வழங்கப்பட்டது என்றார்.

மீண்டும் தவிசாளர், இது எந்தத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட காணியாகவும் இருக்கலாம். இக் காணியில் இருப்பது ஆயிரக்கணக்கானவர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன.

இங்கு நினைவு கூர்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும். அடிப்படையில் மயானங்கள் உள்ளராட்சி மன்றங்களுக்கு பாரதீனப்படுத்தப்படவேண்டும். சட்ட ரீதியில் உள்ளுராட்சி மன்றங்களே அக் காணிகளை நிர்வகிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அபிவிருத்திக்குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, இவ்விடயம் பாதுகாப்பு அமைச்சு, ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடையது என்றார்.

இதற்கு பதிலளித்த தவிசாளர் இங்கு உத்தியோகத்தர்களால் வெளியிடப்படும் தகவல்களின் அடிப்படையில் துயிலும் இல்ல காணி தொடர்பில் பல மாற்றங்கள் வெளித்தெரியாது நடந்துள்ளன. நீங்கள் அரசாங்கத்தின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் – அபிவிருத்திக் குழுத்தலைவர் எனவே அரசாங்கம் என்று வேறு ஒரு சக்தி இருப்பதாக நாம் கூறக்கூடாது.

அரசாங்க முடிவில் நீங்கள் செல்வாக்குச் செலுத்த வேண்டும். விரைவில் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படவேண்டும். அதற்கு வசதியாக அபிவிருத்திக்கழுக்களில் தீர்மானம் எடுங்கள் என்றார்.

இவ் அபிவிருத்திக்குழு தீர்மானம் ஒன்றை எடுத்திருப்பது பாதுகாப்பானது. இக் காணி திணைக்களம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதால் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என அபிவிருத்திக்குழுவின் தலைவர் பதிலளித்தார்.

அதற்கு கேள்வி தொடுத்த தவிசாளர் நீங்கள் உறுதியாக கூறாது சமாளித்த கூறுகின்றீர்கள். ஆகவே இக் காணி சிறைச்சாலைத் திணைக்களத்திடம் இருந்து பிரதேச செயலகத்திற்கு விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று நீங்கள் உத்தரவாதமளிப்பதை பதிவு செய்யுங்கள் என கூறினார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
15 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

திருகோணமலை உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்திச் சென்ற 05 டிங்கி படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

by Amizhthu 15 January 2026
written by Amizhthu

திருகோணமலை, உப்பாறு, மகாவலி கங்கையை அன்மித்த பகுதியில் 2026 ஜனவரி 13 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மகாவலி கங்கையின் உப்பாறு பாலத்திற்கு அருகில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து (05) டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.

அதன்படி, மகாவலி கங்கையின் உப்பாறு பாலத்திற்கு அருகிலுள்ள பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கோகண்ணா நிறுவனம் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ஐந்து (05) சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகள் சோதனை செய்யப்பட்டன. அங்கு, மகாவலி கங்கையின் உப்பாறு பாலத்திற்கு அருகிலுள்ள பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து (05) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன, மேலும் சுமார் 30 லிட்டர் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, மணலை ஏற்றிச் சென்ற ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிண்ணியா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
15 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
கட்டுரைகள்

புதிய ஆர்க்டிக் பனிப்போரின் மையப்புள்ளியாக கிரீன்லாந்து

by Amizhthu 15 January 2026
written by Amizhthu

இறையாண்மை, நேட்டோ ஒற்றுமை மற்றும் ஏகாதிபத்திய அதிகார அரசியலின் மீள்வருகை

✦. கிரீன்லாந்தின் குரல்: “நாங்கள் விற்பனைக்கு அல்ல”

உலக அரசியலின் ஓரங்கட்டப்பட்ட நிலப்பரப்பாக நீண்ட காலம் புறக்கணிக்கப்பட்டிருந்த கிரீன்லாந்து, இன்று உலக அதிகார அரசியலின் மையப்புள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. ஆர்க்டிக் பகுதி மீதான போட்டி தீவிரமடையும் நிலையில், கிரீன்லாந்து இனி ஒரு பனித்தீவு அல்ல; அது உலக வல்லரசுகளின் மூலோபாய கணக்குகளில் மைய இடம் பிடித்துள்ள அரசியல் நிலப்பரப்பாக மாறியுள்ளது.

இறையாண்மையை உறுதியாக நிலைநாட்டும் ஒரு அரிய மற்றும் தெளிவான அரசியல் நடவடிக்கையாக, கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரடெரிக் நீல்சன், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் ஆகியோருடன் இணைந்து, கிரீன்லாந்தை வாங்க வேண்டும் என்ற அமெரிக்காவின் மீண்டும் எழுந்த ஆர்வத்தைத் திட்டவட்டமாக நிராகரித்தார். வாஷிங்டனில் நடைபெறவிருந்த முக்கிய சந்திப்பிற்கு முன்னதாக அவர் வெளியிட்ட அறிவிப்பு உலக கவனத்தை ஈர்த்தது:

“கிரீன்லாந்து அமெரிக்காவிற்குச் சொந்தமாகாது.
இன்று நாம் அறிந்திருக்கும் கிரீன்லாந்தையே நாம் தேர்ந்தெடுக்கிறோம்.”

இந்த வார்த்தைகள் வெறும் அரசியல் அடையாளச் சொற்கள் அல்ல. அதிகரித்து வரும் புவியியல்–அரசியல் அழுத்தங்களுக்கு வழங்கப்பட்ட நேரடியான அரசியல் பதிலடி ஆகும். குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை “மூலோபாயத் தேவை” என வரையறுத்து, அதை வாங்கும் யோசனையை மீண்டும் வெளிப்படையாக முன்வைத்த சூழலிலேயே இந்த அறிவிப்பு வெளிவந்தது.

ஒரு வல்லரசின் அழுத்தத்தை எதிர்ப்பது எளிதான காரியம் அல்ல என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் மெட்டே பிரடெரிக்சன், டென்மார்க்கும் கிரீன்லாந்தும் ஒரே அரசியல் முனையில் உறுதியாக நிற்கின்றன என்றும், பேச்சுவார்த்தைக்கு தயார் என்றாலும் அடிபணிவதற்கு ஒருபோதும் தயாரில்லை என்றும் தெளிவாக வலியுறுத்தினார்.

✦. இறையாண்மை மற்றும் கூட்டணி: கிரீன்லாந்தின் தெளிவான அரசியல் தெரிவு

நூக் மற்றும் கோபன்ஹேகன் ஆகிய இரு அரசியல் மையங்களிலிருந்தும் வெளிப்படும் செய்தி ஒரே குரலில் ஒலிக்கிறது:

• கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல.

• அமெரிக்காவால் ஆளப்படவோ, அதற்குச் சொந்தமாகவோ அது மாறாது.

• கிரீன்லாந்து தொடர்ந்தும் டென்மார்க் இராச்சியத்தின் ஒரு அங்கமாகவே இருக்கும்.

முக்கியமாக, கிரீன்லாந்தின் அரசியல் தலைமை, டென்மார்க், நேட்டோ (NATO) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உள்ள தனது பிணைப்புகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது.
ஆனால் உரிமை கோரல் மற்றும் கட்டாயப்படுத்தல் — இவை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்ற நிலைப்பாடு தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வேறுபாட்டை கிரீன்லாந்து மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது:
பாதுகாப்பு ஒத்துழைப்பு ≠ அரசியல் உடமை.

✦. டிரம்ப், “டொன்ரோ கோட்பாடு” மற்றும் அமெரிக்காவின் விரிவடையும் ஆதிக்க நோக்கு

இந்த நெருக்கடியின் அடித்தளத்தில், அமெரிக்காவின் மூலோபாய சிந்தனையில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றம் தான் உள்ளது. ஆய்வாளர்கள் இதனை “டொன்ரோ கோட்பாடு” என வர்ணிக்கின்றனர். இது, பழைய மன்ரோ கோட்பாட்டின் தீவிரமான மற்றும் ஆபத்தான விரிவாக்கமாகும்.

இந்தக் கொள்கையின் கீழ், அமெரிக்கா ஒரு பரந்த புவியியல் மண்டலத்தின் மீது முழுமையான ஆதிக்கத்தை கோருகிறது:

அலாஸ்கா மற்றும் ஆர்க்டிக் முதல்
அண்டார்டிகா மற்றும் தெற்கு பெருங்கடல் வரை.

இந்த அரசியல் கட்டமைப்பின் கீழ், கிரீன்லாந்து இனி ஒரு நேட்டோ கூட்டாளியின் நிலப்பரப்பாக மட்டும் பார்க்கப்படவில்லை. மாறாக, அது சமரசத்திற்கு இடமில்லாத ஒரு மூலோபாயச் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நோக்கங்கள் தெளிவானவை:

புவிசார் முக்கியத்துவம்:
ரஷ்ய அணு ஏவுகணைகள் அமெரிக்காவை நோக்கி பயணிக்கும் சாத்தியமான பாதையில் கிரீன்லாந்து அமைந்துள்ளது. மேலும், ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களை கண்காணிக்கும் ஜிஐயூகே (GIUK) கடல்வழி இடைவெளி எனப்படும் முக்கிய மூலோபாயப் பகுதியில் கிரீன்லாந்து மையப் பங்கு வகிக்கிறது.

அரிய மண் வளங்கள்:
மின்னணு சாதனங்கள், மேம்பட்ட ஆயுதங்கள், இராணுவ தொழில்நுட்பங்களுக்கு அவசியமான அரிய கனிம வளங்கள்—குறிப்பாக டான்ப்ரீஸ் (Tanbreez) பகுதியில்—பெருமளவில் உள்ளன. இத்துறையில் தற்போது சீனா உலக ஆதிக்கம் செலுத்துகிறது.

எதிர்கால ஆர்க்டிக் கப்பல் போக்குவரத்து:
பனிப்பரப்புகள் உருகுவதால், ஆசியா–ஐரோப்பா இடையே புதிய கடல் வர்த்தகப் பாதைகள் உருவாகுகின்றன. கிரீன்லாந்தின் மீது கட்டுப்பாடு என்பது, எதிர்கால உலக வர்த்தக ஓட்டத்தின் மீது கட்டுப்பாடு என்பதையே குறிக்கிறது.

✦. விளிம்பில் நேட்டோ: ஆர்க்டிக் பாதுகாப்பா அல்லது கூட்டணியின் சிதைவு?

அமெரிக்கா கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக கைப்பற்றும் எந்த முயற்சியும், நேட்டோ கூட்டணியின் முடிவாகவே அமையும் என்று டென்மார்க் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நேட்டோவின் அடிப்படைத் தூண் ஐந்தாம் கட்டுரை (Article 5) ஆகும்:
ஒரு உறுப்பினர் மீது நடத்தப்படும் தாக்குதல், அனைவர் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகக் கருதப்படும்.

ஒரு நேட்டோ உறுப்பினர், மற்றொரு உறுப்பினரின் நிலப்பரப்பின் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்டால், அது கூட்டணியின் சட்டப்பூர்வ, அரசியல் மற்றும் தார்மீக அடித்தளத்தையே சிதைத்துவிடும்.

✦. ரஷ்யாவின் நுழைவு: மெட்வெடேவின் நையாண்டி அரசியல் சவால்

இந்த பதற்ற சூழலில், ரஷ்ய துணை பாதுகாப்பு கவுன்சில் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் வெளிப்படையாகத் தலையிட்டார். டிரம்பின் கிரீன்லாந்து ஆர்வத்தை கிண்டல் செய்த அவர், கிரீன்லாந்தின் 55,000 மக்கள் ரஷ்யாவுடன் இணைய வாக்களித்தால், வாஷிங்டனின் கனவு உடனே முடிவுக்கு வரும் என்று நையாண்டியாகக் கூறினார்.

இது நகைச்சுவையாக வெளிப்பட்டாலும், அதன் அரசியல் செய்தி தெளிவானது:
ஆர்க்டிக் என்பது அமெரிக்காவின் தனிப்பட்ட விளையாட்டு மைதானம் அல்ல.

✦. 1968: மறக்க முடியாத அணுஆயுதத் தழும்புகள்

1968 ஆம் ஆண்டு, அணு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க B-52 குண்டுவீச்சு விமானம், கிரீன்லாந்தின் பனிப்பரப்பில் விபத்துக்குள்ளானது. இதில் புளூட்டோனியம் பரவியதுடன், ஒரு அணுக்கருப் பகுதி இன்றுவரை மீட்கப்படவில்லை.

கிரீன்லாந்து மக்களின் அனுமதி இன்றியே நடந்த இந்த சம்பவம், அமெரிக்காவின் மீது ஆழமான வரலாற்று அவநம்பிக்கையை இன்றளவும் உயிருடன் வைத்திருக்கிறது.

✦. நேட்டோவின் எச்சரிக்கையான அரசியல் நகர்வு

பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில், நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே, ஆர்க்டிக் பாதுகாப்பு ஒருங்கிணைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். அதே நேரத்தில், குரோஷிய பிரதமர் ஆண்ட்ரே பிளென்கோவிக், கிரீன்லாந்து டென்மார்க்கின் இறையாண்மை கொண்ட நிலப்பரப்பு என்பதைக் தெளிவாக மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், டென்மார்க் தனது பாதுகாப்புத் திறன்களை விரிவுபடுத்தி வருகிறது:

• எப்–35 போர் விமானங்கள்
• பி–8 கடல்சார் ரோந்து விமானங்கள்
• ஆர்க்டிக் கண்காணிப்புக்கான நீண்ட தூர ட்ரோன்கள்

✦. முடிவுரை: போர் பிந்தைய உலக ஒழுங்கிற்கான ஒரு தீர்மான சோதனை

கிரீன்லாந்து இனி ஒரு தொலைதூர ஆர்க்டிக் நிலப்பரப்பு மட்டுமல்ல. அது, உலகம் நகரும் அதிகார அரசியலின் பிரதிபலிப்பு கண்ணாடி.

இங்கே எழும் அடிப்படை கேள்வி ஒன்றே:

“இறையாண்மை இன்னும் முக்கியம்தானா?”

கிரீன்லாந்து மக்கள் அதற்கு எளிமையாகவும் உறுதியாகவும் பதிலளித்துள்ளனர்:

“நாங்கள் ஒரு மக்கள்.
ஒரு பொருள் அல்ல.”

உலகம் அந்தப் பதிலுக்கு மதிப்பளிக்கிறதா என்பதே,
நேட்டோவின் எதிர்காலத்தையும்
உலகளாவிய அரசியல் ஒழுங்கின் திசையையும் தீர்மானிக்கப் போகிறது.

எழுதியவர்
ஈழத்து நிலவன்
தமிழ் தேசிய வரலாற்று ஆய்வாளர்
சர்வதேச அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர்

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
15 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
அகவை வாழ்த்து

அகவை வாழ்த்து – ஜனவரி 15

by Amizhthu 15 January 2026
written by Amizhthu

அகவை வாழ்த்து – ஜனவரி 15 | இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை றொசான்
நடேசன் சிவதாசன்
பாலாவத்தை, புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1989
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை லோலோ
செல்லத்துரை சிவதாசன்
பெரியகுளம், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.06.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை சதீஸ் (றஜீன்)
கணபதிப்பிள்ளை இரத்தினம்
8ம் வட்டாரம், முதலைக்குடா, முனைக்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் செந்தில்
சுப்பிரமணியம் குலஞானேஸ்வரன்
மாதகல் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் இலக்கணா
பாலச்சந்திரன் பிறேமினி
நுணாவில் கிழக்கு, கல்வயல், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை நனினிகாந்தி
பழனிநாதன் கவிதா
கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.12.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை அசோகன்
சதாசிவம் பரமகுரு
முனைத்தீவு, பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.06.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் புண்ணியமூர்த்தி
சின்னத்தம்பி சிவகுமார்
இன்ஸ்பெக்ரர் ஏத்தம், பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 10.07.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை குட்டியா
விஸ்வலிங்கம் சாந்தநாயகி
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை சரத்பாபு
நவரத்தினம் கோபிநாத்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் கஜன்
சின்னையா சீவரத்தினம்
அளவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் ஜெயந்தன்
விநாயகமூர்த்தி விஜயகுமார்
திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 02.08.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை சங்கர்
இந்திரலிங்கம் கிரிதரன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் இளங்கோவன் (இளங்கோ)
தர்மலிங்கம் சிறிதரன்
ஜெயபுரம், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.09.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் அற்புதன்
கோவிந்தசாமி செல்லத்துரை
தேவிபுரச்சந்தி, புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.11.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை ஆற்றலோன்
முருகன் உதயசங்கர்
இறம்பைக்குளம், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 13.11.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் அருள் (ஜெயம்)
பரசுராமன் சோமசீலன்
2ம் வட்டாரம், குச்சவெளி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 31.12.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் வாமதேவன் (தேவன்)
செல்லத்துரை சந்திரலிங்கம்
தாளையடி, நாகர்கோவில் முகாம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.1994
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் விடுதலை (அன்ராஜ்)
பரஞ்சோதி சிவநேசன்
ஆழியவளை, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.01.1994
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் ஆழியன் (லக்ஸ்மன்)
ஆறுமுகம் சாந்தலிங்கம்
நொச்சிமுனை, கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.09.1994
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் வாஞ்சிநாதன்
வேல்முருகு குமார்
35ம் கிராமம், வைக்கலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.12.1994
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் ஜெயந்தன்
சோதிலிங்கம் கஜேந்திரன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் நந்தினி
கதிரமலை மதிவதனி
மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை செந்தமிழ்ச்செல்வி
இராசரத்தினம் ஞானாம்பிகை
தம்பகாமம், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் துளசிதாசன்
பொன்னம்பலம் ரமேஸ்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.12.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை திதியன்
இராசதுரை ரமேஸ்பாபு
வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 05.04.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் சதீஸ்காந்தன்
பாலசிங்கம் லவன்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.05.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் செங்கதிர்
சூசைப்பிள்ளை ஜேசுதாசன்
மடு அகதி முகாம்
மன்னார்
வீரச்சாவு: 08.06.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் புண்ணியவரதன்
தவராஜா ராஜலிங்கம்
சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் இளங்கோவன்
தேவராசா நிர்மலன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் மலையரசி
மாசிலாமணி இளங்கோமதி
தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.04.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் சாந்தன் (சங்கிலியன்)
செல்லத்துரை தேவரதன்
காலையூர், கட்டைபறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 13.04.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை தவம்
கனகரட்ணம் றீகன்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.06.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை நிலா
ஞானப்பிரகாசம் ஆன்மேரி
பெரியபண்டிவிரிச்சான், மடு
மன்னார்
வீரச்சாவு: 03.06.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் விடுதலை
முனுசாமி கோபால்
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.08.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கலைச்செல்வன்
கந்தன் சபேசன்
கரவெட்டி மேற்கு, நெல்லியடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை இயலினியன்
சின்னையா வரதன்
நாவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் பூங்குழலி
கறுப்பையா யோகேஸ்வரி
பழையகமம், முரசுமோட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் சுருதி
செல்லத்துரை உமாதேவி
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.10.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் கதிர்
நாகராசா ஜெயந்தினி
2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் குமரன் (ஈழவாணன்)
தங்கராசா சந்திரகுமார்
குப்பிளான், ஏழாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை காண்டீபன்
சின்னராசா சுதாகரன்
பத்தைமேனி, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை புலிமகன்
அமிர்தலிங்கம் பிரதீஸ்வரன்
வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் கஜேந்தன் (பாசமணி)
இராசலிங்கம் ஞானசிங்கம்
அருள்நேசபுரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.12.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கலையரசன்
மாரிமுத்து சிவகுமார்
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் வந்தனன்
பாலசிங்கம் புவிராஜ்
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.08.2004
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

சதீஸ்குமார்
மகேந்திரம் சதீஸ்குமார்
தப்பிலுவில் – 01
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2003
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare


“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
15 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

நினைவு வணக்கம் | ஜனவரி 15

by Amizhthu 15 January 2026
written by Amizhthu

நினைவு வணக்கம் | ஜனவரி 15 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை நாகக்கோன்
பவுண்நாதன் ஜெகதீசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.01.2009

கப்டன் பாநிலவன்
பரராஜசிங்கம் கிருஸ்ணகுமணன்
கமநலசேவை வீதி, துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.01.2009

கப்டன் அமர்கிளி
நாகேஸ்வரன் வினோதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் விதுரன்
திருச்செல்வம் சுகதாசன்
கட்சன் வீதி, வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் அமுதநிலா
நடராசா தர்சினி
தொட்டியடி, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் தேவிகா
மோதகவேல் நிர்மலா
3ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் அறிவழகன்
முத்துலிங்கம் சுதாஸ்கரன்
செம்மலை, அலம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் முரளி
ரமேஸ் ரகுபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் தியாகவிழி (பிரியந்தினி)
கணபதி தவச்செல்வி
4ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.01.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் அற்புதன்
இரத்தினசிங்கம் ரவிகரன்
வெருகல் முகத்துவாரம், மாவடிச்சேனை
திருகோணமலை
வீரச்சாவு: 15.01.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கண்ணன்
ஐயம்பிள்ளை ராஜேஸ்கண்ணா
பாலமோட்டை, ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 15.01.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் மன்மதன்
நாகேந்திரன் வாணிகாந்தன்
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.01.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் ஆர்த்திகன்
பேரின்பராசா குமரன்
சின்னத்தோட்டம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 15.01.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் சுபாரூபன்
கந்தசாமி மனோகரன்
1ம் வட்டாரம், மாவடிவேம்பு, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.01.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை பழனிமறவன்
வேலுப்பிள்ளை கமலதாசன்
விளக்குவைத்தகுளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 15.01.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் வெற்றிவேல்
மாணிக்கராசா ஜெயராசா
1ம் குறிச்சி, பாண்டிருப்பு
அம்பாறை
வீரச்சாவு: 15.01.1994
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை பாமதி
யோசப் சாந்தி
முன்னம்போடிவெட்டை, தோப்பூர்
திருகோணமலை
வீரச்சாவு: 15.01.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் ஜனதாஸ்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.01.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை ஜெயவந்தான்
சிதம்பரப்பிள்ளை குணசிங்கம்
காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 15.01.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை சந்துரு
மலையப்பன் யோகரட்ணம்
பாரதிபுரம் விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.01.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை உக்கினாஸ் (டக்ளஸ்)
சண்முகநாதன் யோகலிங்கம்
இரணைமடுச் சந்தி, பாரதிபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.01.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் தும்பன் (மகேந்திரன்)
அந்தோனிப்பிள்ளை மரியதுரை
பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.01.1989
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

சுதா
வி. சுதாகரன்
சேனையூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 15.01.1986
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வரதன்
அகிலேசப்பிள்ளை வரதராசன்
கடற்கரைச்சேனை, மூதூர், திருமலை
திருகோணமலை
வீரச்சாவு: 15.01.1986
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

தீபன் (கவிஞன்)
நா. சந்திரசேகரம்
ஆலங்கேணி, கிண்ணியா
திருகோணமலை
வீரச்சாவு: 15.01.1986
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மைக்கல்
மைக்கல் லிபோன்
நாவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.01.1986
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரா
வீரகுமார்
நாவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.01.1986
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மோகன்
மோகன்
நாவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.01.1986


“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
15 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

கிட்டு அவர்களின் 33 வது ஆண்டு நினைவுநாள் – கிட்டு பூங்கா -யாழ்ப்பாணம்

by Amizhthu 14 January 2026
written by Amizhthu

கிட்டு அவர்களின் 33 வது ஆண்டு நினைவுநாள்..
16.01.2026 (வியாழக்கிழமை)
காலை 9.30 மணியளவில்

கிட்டு பூங்கா -யாழ்ப்பாணம்.

ஏற்பாட்டாளர்கள்
நினைவேந்தல் குழு – யாழ்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
14 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
சர்வதேசச் செய்திகள்

மாஞ்செஸ்டர் யுனைடெட் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக மைக்கேல் காரிக் நியமனம்

by Amizhthu 14 January 2026
written by Amizhthu

மாஞ்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மைக்கேல் காரிக் இடைக்கால பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் ரூபென் அமோரிம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு المر candidates உடன் ஆலோசனைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றன. ஒப்பந்த விவரங்கள் முடிவடைந்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை இந்த நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அணிக்கு நன்கு அறிமுகமான முகம்

44 வயதான காரிக், யுனைடெட்டின் முன்னாள் நடுப்பகுதி வீரர். 12 ஆண்டுகள் கழகத்திற்காக 464 போட்டிகளில் விளையாடிய அவர், பின்னர் ஜோசே மௌரின்யோ மற்றும் ஒலே குனார் சோல்ஸ்க்ஜேர் தலைமையிலான பயிற்சி குழுவிலும் பணியாற்றினார். 2021-ல் தற்காலிகப் பொறுப்பில் மூன்று போட்டிகளில் தோல்வியின்றி அணியை வழிநடத்திய அனுபவமும் அவருக்கு உள்ளது.

காரிக்கின் தந்திரத் திட்டங்கள், அணியைப் பற்றிய ஆழமான அறிவு மற்றும் உடனடி ஒருங்கிணைப்பு திறன் ஆகியவை கழக நிர்வாகத்தை கவர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பயிற்சி குழு

காரிக்குடன் இணைந்து பணியாற்ற உள்ளவர்கள்:

  • ஸ்டீவ் ஹாலண்ட் – முன்னாள் இங்கிலாந்து உதவி பயிற்சியாளர்
  • ஜொனாதன் வுட்கேட் – மிடில்ஸ்பரோவில் காரிக்கின் உதவி பயிற்சியாளர்
  • டிராவிஸ் பினியன் – யுனைடெட் U21 பயிற்சியாளர்
  • ஜானி எவன்ஸ் – அண்மையில் பயிற்சி குழுவில் இணைந்தவர்

தற்காலிகப் பொறுப்பில் இருந்த டாரன் ஃப்ளெட்சர் மீண்டும் U18 அணிக்குத் திரும்புகிறார்.

காரிக்கின் முதல் சவால்கள்

யுனைடெட் தற்போது பிரீமியர் லீக்கில் ஏழாவது இடத்தில் உள்ளது. உள்நாட்டு கோப்பை போட்டிகளில் ஏற்கனவே வெளியேறிய நிலையில், காரிக்கின் முதல் இரண்டு போட்டிகளும் கடினமானவை:

  • இந்த சனிக்கிழமை மாஞ்செஸ்டர் டெர்பி
  • அடுத்த வாரம் அர்செனல் மைதானத்தில் முக்கிய المواجهة

ஐரோப்பிய போட்டிகளுக்கான தகுதி பெறுவது கழகத்தின் உடனடி இலக்காகும்.

ஏன் காரிக்?

காரிக், சோல்ஸ்க்ஜேர், வான் நிஸ்டல்ராய் ஆகிய மூவரும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர். ஆனால்,

  • அணியைப் பற்றிய ஆழமான புரிதல்
  • தலைமைத் திறன்
  • விரைவான ஒருங்கிணைப்பு
  • தெளிவான சீசன் திட்டம்
    என பல காரணங்களால் காரிக் தேர்வு செய்யப்பட்டார்.

முன்னாள் வீரர்களின் எதிர்வினை

காரிக்கின் நெருங்கிய நண்பரான வேய்ன் ரூனி, இந்த நியமனத்தை வரவேற்று, “அவர் மிகவும் புத்திசாலி, வீரர்கள் அவரை மதிப்பார்கள்” என்று கூறினார்.

காரிக்கின் முதல் அறிக்கை

“மாஞ்செஸ்டர் யுனைடெட்டை வழிநடத்துவது ஒரு பெருமை,” என்று காரிக் தெரிவித்தார். அணியின் திறனை நம்புவதாகவும், ரசிகர்களுக்குத் தகுந்த ஆட்டத்தை வழங்குவதே தனது நோக்கமாகவும் கூறினார்

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
14 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • News in ENGLISH
  • தமிழீழம்
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • நாட்காட்டி
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d