தமிழகத்தில் ஜனவரி மாதம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகளில், 29 சதவீதம் தரமற்றவை என தெரிய வந்துள்ளது.
நாடு முழுதும் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் நோக்கில், மத்திய — மாநில அரசுகள் மாதந்தோறும் ஆய்வுகளும் பரிசோதனைகளும் செய்கின்றன.
மருந்தகங்கள், சில்லரை விற்பனையகங்கள், மொத்த விற்பனை கூடங்கள், கிடங்குகள், உற்பத்தி அலகுகளில் ஏதேனும் சில மருந்துகளை எடுத்து பரிசோதிக்கப்படுகிறது.
மருந்து கட்டுப்பாட்டு வாரிய வழிமுறைகளின்படி உற்பத்தி செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
அவ்வாறு இல்லாதபட்சத்தில், அவை தரமற்ற மருந்துகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
- புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் அலங்கரிப்பு பணி நடைபெற்று மாவீரர் நாள் அனுஷ்டிக்க தயார் நிலையில் இருக்கின்றது.
- 84 ஈரானிய கடற்படை வீரர்களின் உடல்களை தூதரகத்திற்கு கையளிக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
- தாய்லாந்து ரயில் பேரழிவு: கட்டுமான கிரேன் சரிந்து பயண ரயிலின் மீது விழுந்து 30-க்கும் மேற்பட்டோர் பலி
- தமிழக சட்டசபை அக்டோபர் 14ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
- கரூர் சம்பவம் – சிபிஐ சம்மன்
- சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைத் திருத்துமாறு இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.
அதன்படி, கடந்த ஜனவரி மாதத்தில் நாடு முழுதும், 1,000த்திற்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன.
அவற்றில், 29 சதவீதம் அதாவது 215 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் 43 மருந்துகள் இடம்பெற்று உள்ளன.
அதேபோல், கர்நாடகாவில் 21 சதவீதமும், ராஜஸ்தானில் 17 சதவீதமும் தரமற்ற மருந்துகள் இருந்தன.