மலையாள திரையுலகில், 2021ல் பசில் ஜோசப் நடிப்பில் வெளியான ஜான்.இ.மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிதம்பரம்.
அதன்பின், 2024ல் தமிழகத்தின் கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையப்படுத்தி, மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படத்தை எழுதி இயக்கினார்.
இது, கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. தற்போது இயக்குநர் சிதம்பரம், ஹிந்தி திரைப்படத்தை இயக்கி வருகிறார். அவர் மீது எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
அதில், ‘கொச்சியின் எலம்குளம் பகுதியில் உள்ள என் அடுக்குமாடி குடியிருப்புக்குள், 2022ல் அத்துமீறி நுழைந்த இயக்குநர் சிதம்பரம், என்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, குறிப்பிட்டுள்ளார்.
- இறுதி வணக்கம் “கீர்த்திகன் மோகன்” – தமிழ் இளையோர் அமைப்பு (TYO) சர்வதேசம்
- கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
- தையிட்டி விகாரை: யாழில் திறந்த விவாதம்
- பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி லக்கி ஓபராய் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், வெளிநாட்டில் வசிக்கும் தாதா உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- தீவு முழுவதும் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலைநிறுத்தம். கதிரியக்கவியல் துறை முடங்கியது.
- தமிழ்நாட்டின் புதிய அரசியல் மாற்றம்
இதன்படி, சிதம்பரம் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு விரைவில் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். இது குறித்து சிதம்பரம் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.