ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது.
முதல் போட்டி மழையால் ரத்தானது. 2, 3வது போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் உள்ளது.
நான்காவது போட்டி இன்று கோல்டு கோஸ்ட்டில் உள்ள கர்ராரா மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது.
- உலகளாவிய பொருளாதார திருப்புமுனை: கடன், பணவீக்கம் மற்றும் மத்திய வங்கி தலையீடு
- இஸ்ரேல் 15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்தது; இடைநிறுத்த ஒப்பந்தம் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது
- மோகாதிஷு எச்சரிக்கை: சோமாலிலாந்தில் இஸ்ரேல் தளத் திட்டங்களுக்கு சோமாலியா கடும் எதிர்ப்பு
- அதிக நேரப் போராட்டத்தில் பெனினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய எகிப்து
- ட்ரோன் ஆதரவு பெற்ற போராளிகள் நைஜீரிய இராணுவ முகாமில் தாக்குதல் — பல வீரர்கள் உயிரிழப்பு
- அமெரிக்க தாக்குதல் எச்சரிக்கையில் பிராந்திய பதற்றம் தீவிரம்: ஈரான் பழிவாங்கும் என எச்சரிக்கை

டிராவிஸ் ஹெட், ஹேசல்வுட் என இரு முன்னணி வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.
இதனால் கேப்டன் மிட்சல் மார்ஷுடன், இன்று மாத்யூ ஷார்ட் துவக்கம் தர காத்திருக்கிறார்.
அதுதவிர கடந்த 3 போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெறாமல் இருந்த ‘ஆல் ரவுண்டர்’ மேக்ஸ்வெல் வருகை அணிக்கு பலம் சேர்க்கிறது.
இந்தப் போட்டியில் ஆஸி.,யைத் தோற்கடித்து இந்திய அணி தொடரில் முன்னிலை பெறுமா? என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்துள்ளனர்.