‘புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குறி வைத்து, அவர்களை அவமதிக்கும் வகையில், தி.மு.க.,வினர் பேசுவது வாடிக்கையாகி விட்டது’ என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த தி.மு.க., கூட்டத்தில், அமைச்சர் அன்பரசன், தி.மு.க., – எம்.பி., கனிமொழி சோமு ஆகியோர், வட மாநிலத்தவரை விமர்சித்து பேசினர். இதை கண்டித்து, அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது, எண்ணற்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டபோதும், தி.மு.க., அமைச்சர்களும், எம்.பி.,க்களும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான வெறுப்பை, எவ்வாறு இயல்பாக்குவது என்பதைத் தவிர, வேறு எதையும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை.
தி.மு.க., – எம்.பி., கனிமொழி சோமு, ஹிந்தி படித்த, 10,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஒவ்வொரு நாளும் கஞ்சா, பானிபூரி விற்க, தமிழகத்திற்கு வருவதாக கூறுகிறார். அதே மேடையில், அவருக்கு முன் பேசிய அமைச்சர் அன்பரசனும், அதேபோல், அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.
- எரிவாயு பற்றாக்குறை தீவிரம்: தென் இந்திய நெசவு நகரங்களில் தொழிலாளர்கள் வெளியேறத் தொடங்கினர்
- மூலிகை வேளாண்மை மாநாட்டை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி: இயற்கை விவசாய வளர்ச்சிக்கு புதிய உந்துதல்
- முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி புதுச்சேரியில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
- நாம் தமிழர் உறவுகள் இதை செய்யாதீர்கள்!
- கோயம்புத்தூரை தொழில்நுட்ப நெய்தல் துறையின் புதிய உலக மேடையாக மாற்றும் தமிழ்நாடு–மெஸ்ஸே பிராங்க்ஃபர்ட் கூட்டணி
- 22ம் தேதி முதல் “மருந்துகளுக்கு 5 சதவீதம் மட்டுமே வரி”
ஊழல் நிறைந்த தி.மு.க., ஆட்சியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குறி வைத்து, இதுபோன்று அவமதிக்கும் வகையில் பேசுவது, வாடிக்கையாகி விட்டது. – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.