7
நேற்று வெள்ளிக்கிழமை (20-02-2026) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரணியகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தெரணியகலை – மாலிபொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவருக்கும் அவரது உறவினருக்குமான தனிப்பட்ட தகராறு காரணமாக, சந்தேகநபர் இந்த கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தெரணியகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கொலையைச் செய்த சந்தேகநபரைக் கைது செய்ய, தெரணியகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.