இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பதட்டத்தைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
பதட்டங்களைத் தணிக்கவும், பிரச்னைகளைத் தீர்க்கவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும். பிராந்தியத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்.
இந்தியர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். தூதரகங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
- அகிரா நந்தன் அடையாளத்தை அனுமதியின்றி பயன்படுத்திய AI திரைப்படத்திற்கு தடை: தில்லி உயர்நீதிமன்றம் கடும் நடவடிக்கை
- கோவா நைட் கிளப் தீ விபத்தில் 25 உயிரிழப்பு — பாதுகாப்பு விதிகள் மீறல் குறித்து விசாரணை.
- ‘ஓட்டுத் திருட்டு’ குறித்து காங்கிரஸ் நடத்தும் போராட்டத்துக்கும், இண்டி கூட்டணிக்கும் எந்தத் தொடர்புமில்லை, – உமர் அப்துல்லா.
- 🌦️ இந்திய ஒன்றியத்தின் தேசிய வானிலை நிலவரம்
- கொல்கத்தாவில் மெஸ்ஸி வருகை – 70 அடி சிலை திறப்பு, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்
- கிஷ்த்வார் மலைப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை: ஏழு ராணுவ வீரர்கள் காயம்