பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்து உள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள சுவிஸ் தேசிய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து நடத்திய மாநாட்டில் சஞ்சய் மல்ஹோத்ரா பேசியதாவது:மேற்கு ஆசிய நெருக்கடி நீடித்தால், இந்தியா பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது. அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையானது பணவீக்கம், எரிபொருள் இறக்குமதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மேலும் மோசமடைந்தால், சில்லறை எரிபொருள் விலைகளை காலவரையின்றி மாற்றாமல் வைத்திருக்க அரசால் முடியாமல் போகலாம். மோதல் தொடர்வதால், கலால் வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வை ஈடுசெய்து வருகின்றனர். இவ்வாறு சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.
அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாப்பதற்காக, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
- இந்தியா 2026 வளர்ச்சி முன்னேற்றம்.
- பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிறிலங்கா பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
- 𝐕𝐄𝐍𝐄𝐙𝐔𝐄𝐋𝐀 𝐔𝐍𝐃𝐄𝐑 𝐅𝐈𝐑𝐄 𝐆𝐞𝐨𝐩𝐨𝐥𝐢𝐭𝐢𝐜𝐬, 𝐒𝐨𝐯𝐞𝐫𝐞𝐢𝐠𝐧𝐭𝐲, 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐑𝐞𝐭𝐮𝐫𝐧 𝐨𝐟 𝐑𝐞𝐠𝐢𝐦𝐞-𝐂𝐡𝐚𝐧𝐠𝐞 𝐖𝐚𝐫
- நியாமே விமான நிலையத் தாக்குதலை தடுத்து நிறுத்த ரஷ்யப் படைகள் உதவியதாக மாஸ்கோ உறுதி
- EPDP Murder List Shocker – Former Member’s Explosive Revelation!
- திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அமைச்சர் ரகுபதிக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.