வவுனியா சாலம்பைக் குளத்தில் மாநகர சபை மற்றும் பிரதேச சபையினால் கொட்டப்படும் குப்பையின் காரணமாக அயலில் உள்ள சாலம்பைக்குளம் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட இடத்துக்கு நேற்று பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
நீண்ட காலமாக குறித்த பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வரும் நிலையில் அதனை அண்டிய பகுதியில் கடந்த காலங்களில் சாலம்பைக்குளம் புதிய வீட்டுத் திட்டம் அமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் கொட்டப்பட்டு வருகின்ற குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு அங்கு தீ வைக்கப்படுவதன் காரணமாக புகைமூட்டம் கிராமத்துக்குள் வருவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர்.
இன்றைய தினம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதியுர்தீன், அரசாங்க அதிபர், சுற்றாடல் அதிகார சபையினர், வவுனியா மாநகர சபை ஆணையாளர், தமிழ் பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதிக்கு களவிஜயம் செய்தனர்.
- பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீதன்’க்கு இன்னும் “தடுப்புக்காவல் உத்தரவு” பிறப்பிக்கப்படவில்லை.
- அகவை வாழ்த்து – டிசம்பர் 18
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “மூன்றாம் நாள் 17.09.1987” தியாக வேள்வி.!
- தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது; முத்து நகரில் விவசாயிகள் எச்சரிக்கை
- மிருசுவில் படுகொலை | 19.12.2000
- கொக்குத்தொடுவாய் தமிழர்களின் நிலங்களை சிங்கள தொழிலதிபர்கள் ஆக்கிரமிப்பது அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அழிக்கும் – ரவிகரன் எம்.பி.
இதன்போது அவர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடினர்.