திருகோணமலை | 19.11.2025 – வெருகல் பகுதியைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு விழா வெருகல் கலாசார மண்டபத்தில் இன்று புதன்கிழமை (19.11.2025) காலை நடைபெற்றது.

இதன்போது மாவீரர் பெற்றோர் மேள தாளங்கள் முழங்க விழா மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அதன் பின்னர் யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெருகல் பகுதியைச் சேர்ந்த 150 மாவீரர் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கணேசபிள்ளை குகன், மாவட்ட நிருவாகச் செயலாளர் சி.அகிலன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
- நியூசிலாந்து தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது — பாதுகாப்பு மோசமடைந்ததால் தூதர்கள் வெளியேற்றம்
- அமெரிக்காவில் பரவலான போராட்டங்கள்: ICE துப்பாக்கிச்சூடு தேசிய அளவில் அதிர்ச்சி
- ஹார்முஸ் நெருக்கடி: உலகளாவிய எரிசக்தியின் இராணுவமயமாக்கல் மற்றும் போக்குவரத்து முடக்கம்
- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது.
- நினைவு வணக்கம் – செப்டம்பர் 11
- சர்வதேச கடல் எல்லைகளுக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!




