கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பெரிய அரசியல் நெருக்கடியாக, வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.டி.அப்பச்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவராக அப்பச்சன் இருந்தார். இந்த நிலையில்,வயநாடு காங்கிரஸ் முன்னாள் டி.சி.சி பொருளாளர் என்.எம். விஜயன் மற்றும் முள்ளன்கொல்லி பஞ்சாயத்து உறுப்பினர் ஜோஸ் நெல்லெடம் ஆகியோரின் தற்கொலைகள் உட்பட காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சை இருந்தது. மேலும் காங்கிரஸ் தலைமையில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இந்த நிலையில் வயநாடு எம்பி பிரியங்கா, வயநாடு வந்தபோது, அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து தனது கடுமையான எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.
பிரியங்காவின் சமீபத்திய பயணத்தின் போது மாவட்டத் தலைமைக்கும் எம்.பி.க்கும் இடையிலான உரசல் குறிப்பாகத் தெரிந்தது. அவரது பல பொது நிகழ்வுகளில் அப்பச்சன் பங்கேற்கவில்லை.
- உலக சந்தைகள் அதிர்ச்சி: தொழில்நுட்ப பங்குகள் சரிவு, பாதுகாப்புத் துறை பங்குகள் ஏற்றம்
- மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு தீவகம்
- 20.11.1992 அன்று தமிழீழ கடடபரப்பில் வீராகவியமான “தமிழக மாவீரர்” கடற்புலி கப்டன் ஈழவேந்தன் (டில்லி)
- இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இலங்கை ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
- சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
- மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படும் நிலை ஏற்படும் – டானியல் வசந்தன்
இது மேலும் ஊகங்களுக்கும் சர்ச்சைக்கும் வழிவகுத்தது. அவர் இல்லாதது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, கேபிசிசி கூட்டத்தில் கலந்து கொள்ள திருவனந்தபுரத்தில் இருப்பதாக அப்பச்சன் கூறியிருந்தார். – இந்த நிலையில் அவர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.