| தமிழ் நாட்காட்டி ஏப்ரல் 2026 | |
|---|---|
| அமாவாசை | 17-ஏப்-2026 வெள்ளிக்கிழமை |
| பௌர்ணமி | 01-ஏப்-2026 புதன்கிழமை |
| கார்த்திகை | 19-ஏப்-2026 ஞாயிறு |
| சஷ்டி விரதம் | 22-ஏப்-2026 புதன்கிழமை |
| சங்கடஹர சதுர்த்தி | 05-ஏப்-2026 ஞாயிறு |
| சதுர்த்தி | 20-ஏப்-2026 திங்கட்கிழமை |
| பிரதோஷம் | 15-ஏப்-2026 புதன் 29-ஏப்-2026 புதன்கிழமை |
| திருவோணம் | 11-ஏப்-2026 சனிக்கிழமை |
| மாத சிவராத்திரி | 15-ஏப்-2026 புதன்கிழமை |
| ஏகாதசி | 13-ஏப்-2026 திங்கட்கிழமை 27-ஏப்-2026 திங்கட்கிழமை |
| அஷ்டமி | 10-ஏப்-2026 வெள்ளிக்கிழமை 24-ஏப்-2026 வெள்ளிக்கிழமை |
| நவமி | 11-ஏப்-2026 சனிக்கிழமை 25-ஏப்-2026 சனிக்கிழமை |
| அரசு விடுமுறை நாட்கள் | 03-ஏப்-2026 வெள்ளிக்கிழமை புனித வெள்ளி 14-ஏப்-2026 செவ்வாய் தமிழ் வருடப் பிறப்பு 14-ஏப்-2026 செவ்வாய் அம்பேத்கர் பிறந்த நாள் |
| திருமண நாட்கள் | 06-ஏப்-2026 திங்கட்கிழமை தேய்பிறை 12-ஏப்-2026 ஞாயிறு தேய்பிறை 13-ஏப்-2026 திங்கட்கிழமை தேய்பிறை 16-ஏப்-2026 வியாழன் தேய்பிறை 20-ஏப்-2026 திங்கட்கிழமை வளர்பிறை 23-ஏப்-2026 வியாழன் வளர்பிறை 30-ஏப்-2026 வியாழன் வளர்பிறை |
| திருவிழாக்கள் | 01-ஏப்-2026 புதன்கிழமை பங்குனி உத்திரம் 14-ஏப்-2026 செவ்வாய் தமிழ் வருடப் பிறப்பு 20-ஏப்-2026 திங்கட்கிழமை அட்சய திரிதியை 21-ஏப்-2026 செவ்வாய் ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி 28-ஏப்-2026 செவ்வாய் மீனாட்சி திருக்கல்யாணம் 30-ஏப்-2026 வியாழன் கள்ளழகர் எதிர்சேவை |
இன்றைய ராசி பலன் 13 ஏப்ரல் 2026 திங்கட்கிழமை
மேஷ ராசி அன்பர்களே,
மேஷ ராசி நேயர்களே, இல்லத்தில் நல்ல செய்தி ஒன்று வரும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உறவினர்களால் சில சங்கடங்கள் வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
ரிஷப ராசி நேயர்களே,
ரிஷப ராசி நேயர்களே, குடும்ப கௌரவம் உயரும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். சம்மதமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்,
மிதுன ராசி அன்பர்களே,
மிதுன ராசி நேயர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களால் செலவினங்கள் கூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே,
கடக ராசி நேயர்களே, அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். உறவினர்களிடம் இருந்த பகைமை நீங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
சிம்ம ராசி நேயர்களே,
சிம்ம ராசி நேயர்களே, மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். யாருக்கும் காரணமின்றி சிபாரிசு செய்ய வேண்டாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் சாதிக்க முடியும்.
கன்னி ராசி நேயர்களே,
கன்னி ராசி நேயர்களே, எதையும் வெளிப்படையாக பேசுவதால் சிக்கல்கள் வரும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். விலகிச் சென்ற நபர்கள் வலிய வந்துப் பேசுவர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
துலாம் ராசி நேயர்களே,
துலாம் ராசி நேயர்களே, தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். பிரியமானவர்களின் அன்பு அதிகரிக்கும். உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே,
விருச்சிக ராசி நேயர்களே, மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். பண வரவில் இருந்த சிக்கல் தீரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
தனுசு ராசி நேயர்களே,
தனுசு ராசி நேயர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். யாருக்கும் கேரண்டர் கையெழுத்து போட வேண்டாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மகர ராசி நேயர்களே,
மகர ராசி நேயர்களே, புதிய முயற்சிகள் வெற்றி பெரும். அடுத்தவரிடம் உதவி கேட்க தயக்கம் வரும். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
கும்ப ராசி நேயர்களே,
கும்ப ராசி நேயர்களே, பொருளாதார நிலை சீரான வளர்ச்சி காணும். மறதி தொல்லை அவ்வப்போது வந்து போகும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிக்க முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மீன ராசி நேயர்களே,
மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் அதிகளவில் வரும். எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் பூர்த்தியாகும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். புது தொழில் யோகம் அமையும்.
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 13-04-2026 To 19-04-2026

மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். மறைமுக எதிரிகளின் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். குடும்பத்தில் அதிக செலவுகள் ஏற்படுவதை தவிர்க்க சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. கணவன் மனைவியிடையே இருந்த சண்டை, சச்சரவுகள் குறையும். திடீர் பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். எதிர்பாராத தன லாபம், வெற்றி, அதிர்ஷ்டம் ஆகியவற்றை அடையலாம். வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்.

ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களது பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் புது தெம்பும், தைரியம் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படவும், அதனால் பல நன்மைகள் உண்டாகும். எதிர்கால கனவில் ஒன்று நிறைவேறும். மற்றவர்களுக்கு உதவுவதாக கூறி எந்த ஒரு பிரச்னையிலும் சிக்கிக்கொள்ள வேண்டாம். குடும்ப வருமானம் வெளியில் சொல்லும்படி இருக்கும். உடல் நிலையை பொறுத்தவரை எந்த தொந்தரவும் இருக்காது. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். கடன் பிரச்சனையை சமாளிக்க முடியும். பயணிகளின் போது உடைமைகளை கவனமாக பார்த்து கொள்ளவும். பொது பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
பரிகாரம் : நவக்கிரத்தை தினமும் வழிபடவும்

மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த சீக்கிரத்தில் நடக்கும். எல்லாமுயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் எதிர்பார்த்த மன அமைதி கிடைக்கும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்க வேண்டாம். ஆடை, ஆபரண பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மேன்மை ஏற்படும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை திறம்பட செய்து முடிக்க முடியும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் சிறக்கும்.
பரிகாரம் : குல தெய்வத்தை வணங்கி வழிபடவும்.

கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். உங்களால் சுற்றி இருப்பவர்கள் பயனடைவர். சொந்த வீடு, வாகனம் எண்ணமும் அதற்கான முயற்சிகளும் இருக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். உற்றார், உறவினர் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவர். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பொது நல காரியங்களில் ஈடுபாடு உணவும். குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் வரும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறு வேண்டிவரும். கணவன் மனைவியிடையே வீண் விவாதங்களை தவிர்க்கவும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாய் இருப்பது நல்லது. குடும்பத்திற்காக நிறைய பாடுபட வேண்டியது இருக்கும். நெருங்கிய உறவினர்களிடம் நல்லுறவு ஏற்படும். உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும்.
பரிகாரம் : பைரவரை வழிபடவும்.

சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். புதிய முயற்சிகள் மூலம் வெற்றிகள் தேடி வரும். பணவரவில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிட்டும். குடும்ப விஷயங்களை யாரிடமும் பேசாமல் இருப்பது நல்லது. தேவையற்ற பிரச்னைகள் மற்றும் பிறர் விஷயங்களில் தலையிடாதிருந்தால் வீண் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். புது வாகனம் வாங்கும் எண்ணம் வரும். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். திருமண முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். சுற்று வட்டாரத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். குடும்பத்தில் வரும் சண்டை சச்சரவுகளை பேசி சரிசெய்து கொள்ளவும். உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரபலன்படி, ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். குலதெய்வ வழிபாடு அதிக நன்மையை தரும். பொருளாதார நிலை வளர்ச்சி காணும். பிரயாணங்களால் வீண் செலவுகள் வரும். பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் நல்லது. உற்றார், உறவினர்கள் வழியில் நிறைய ஆதாயங்கள் உண்டு. புது நட்பு வட்டாரம் உருவாகும். குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். உடன்பிறப்புகளிடம் சின்ன மனஸ்தாபம் வரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வீடு மாற எடுக்கும் முயற்சியில் பலன் கிடைக்கும். நிதானிக்க வேண்டிய நேரத்தில் நிதானமாகவும், விரைவாகச் செயல்பட வேண்டிய நேரத்தில் உடனடியாகவும் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் கூடும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்.

துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். அக்கம் பக்கத்தினருடன் நட்பு மலரும். பெரியோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்ய முடியும். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகை மாறும்குடும்ப சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவியிடையே பனிப்போர் ஏற்படும். கடன் வாங்கும் சூழ்நிலை வந்தாலும் அளவுக்கு மீறி கடன் வாங்காமல் பார்த்துக்கொள்ளவும். யாரும் நம்பை புரிந்துகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். உத்யோகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் செழிப்படையும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்.

விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதிர்பாராத சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்ப எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. பயணங்களால் அலைச்சல் இருக்கும். வெளிவட்டார பழக்கவழக்கங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். முக்கிய காரியங்களில் இருந்த இழுபறி நிலை நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிப்படவும்.

தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் திட்டங்களும் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களும் செயல் வடிவம் பெரும். யாருக்கும் எந்த ஒரு வாக்குறுதியம் தராமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற வம்பு, வழக்குகள் உண்டாகி மனசஞ்சலம் ஏற்படும். உடல் சோர்வு, அசதி நீங்கும். இக்கட்டான நேரங்களில் முடிவு எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். வாகன பயணத்தின் போது கவனமாக இருக்கவும். குடும்பத்தில் அடிப்படை வாழ்கை வசதி, சௌகரியங்களுக்குக் குறை இருக்காது. உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும்.

மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். உங்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எதிரிகள் விலகி போவர். பண வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் தினசரி செலவுகள் கட்டுப்படுத்த புது யுக்திகளை கையாள வேண்டிவரும். தீர்க்க முடியாத பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். மனதில் இனம் புரியாத கவலைகளும், பயமும் ஏற்படும். கடன் தொந்தரவு இருக்கும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். உங்கள் பிடிவாத குணம் காரணமாக முக்கிய நபர்களின் நட்பை இழக்க நேரிடும். குடும்பத்துடன் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
பரிகாரம் : ஸ்ரீ சாய்பாபாவை வணங்கி வழிபடவும்.

கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் ஏற்றமான நிலை காணப்படும். பொருளாதாரம் தேவைக்கேற்றபடி இருப்பதால் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். நீண்ட தூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு நிறைய உண்டு. மன தைரியமும், சகாயமும் உருவாகும். தேக ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வீட்டு பராமரிப்பு செலவு கூடும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் மெதுவாக செல்லவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்.

மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சுபிட்சமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார உயர்வால் வாழ்க்கைத் தரம் உயரும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். முக்கியமான பணிகளில் நேரடியாக களத்தில் இறங்குவது நல்லது. உறவினர்கள் இல்லம் நாடி வருவர். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். திட்டமிட்ட காரியங்கள் ஏதோ ஒரு வகையில் எப்படியோ நிறைவேறும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். குடும்பத்தில் வருமானத்திற்கு மீறிய செலவுகள் உண்டாகும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிப்பதால் உடல் சோர்வடையும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்.
ஏப்ரல் மாத ராசி பலன்கள் 2026
| ஏப்ரல் மாத ராசி பலன்கள் 2026 |
| விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 18ம் தேதி முதல் ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 17ம் தேதி வரை (01-04-2026 – 30-04-2026) வாக்கிய பஞ்சாங்கப்படி 01-04-2026 முதல் 30-04-2026 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே அனுபவ பூர்வ உண்மை. ஏப்ரல் 2026 மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு : ஏப்ரல் 02, 2026 – மீன செவ்வாய் ஏப்ரல் 11, 2026 – மீன புதன் ஏப்ரல் 14, 2026 – மேஷ சூரியன் ஏப்ரல் 19, 2026 – ரிஷப சுக்கிரன் ஏப்ரல் 30, 2026 – மேஷ புதன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஆலந்தூர் A.வினோத் குமார் Ph.d (Astrology), செல்: 9003019831 |
மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, இந்த மாதம் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பது அதிகளவில் நன்மையை தரும். பொருளாதாரத்தில் சிறிது சரிவினைச் சந்திக்க நேரலாம். குடும்ப வர செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். முன் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன பிரச்சனைகள் வந்து போகும். பிரியமானவர்களால் சில நெருக்கடிகள் வரலாம். பெரியோர்களின் ஆசி கிட்டும். சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோர்களின் அரவணைப்பு கிட்டும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். நண்பர்களால் சில மனக்கசப்புகள் வரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. எதிலும் பதற்றமடையும் போக்கை கைவிட்டு நிதானமாக நடந்துகொள்ள பழகிக்கொள்ளவும். வேலையில் சிரமங்கள் வரலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 5,6,7,8 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. குடும்ப நிதி நிலை சீரடையும். திட்டமிட்ட பயணங்களால் மகிழ்ச்சி கூடும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். ஒரு சில உடல் உபாதைகள் அவ்வப்போது இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் கவனமாக இருக்கவும். மன குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளியிடங்களில் வார்த்தைகளை குறைத்து பேசவும். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் சில சண்டை, சச்சரவுகள் வந்து போகும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் சேமிப்பை உயர்த்தும். உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். உறவினர்களால் சில பிரச்னையை சந்திக்கக் கூடும். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். குடும்பத்தில் வருமானத்திற்கு மீறிய செலவுகள் இருப்பதால் அனாவசிய செலவுகளை அறவே தவிர்க்கவும். முடிந்த வரை கடன் வாங்குவதை குறைத்து கொள்ளவும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 8,9,10 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்
மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புத்தி சாதுரியத்தால் பல காரியங்களை செய்ய முடியும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்ப இருக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை உண்டு. குலதெய்வ வழிபாடு நன்மை தரும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். குடும்ப வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். எதிர்காலம் பற்றிய பயத்தை தவிர்ப்பது நல்லது. தேக நலனில் அக்கறைகொள்ளவும். பண தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். எதிர்பாராத வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க முடியும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் : 10,11,12,13 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். பொருளாதார நிலையில் ஏற்றம் ஏற்படும். எல்லாவகையிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். மனதில் நிலவி வந்த கவலைகள் நீங்கும். உற்றார், உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். பிரியமானவர்களால் நிறைய நன்மைகள் உண்டு. உண்டு. தொல்லை தந்தவர்கள் கூட தானாக விலகுவர். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குடும்பத்தில் வீண் விரயங்களும் மருத்துவ செலவினங்களும் உண்டு. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். திட்டமிடாத செலவுகள் நிறையவே வரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகன யோகம் உண்டு. சொந்த விஷயங்களுக்கு அடுத்தவரிடம் ஆலோசனை கேட்பதை தவிர்க்கவும். பயணங்களால் வீண் அலைச்சல் வரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். உடல் உபாதைகள் தொடர்பாக சில மருத்துவ செலவுகள் வரும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. புது வேலைக்கு முயற்சி செய்யலாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சந்திராஷ்டமம் : 13,14,15 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண வரவில் ஏற்றம் இருக்கும். எத்தனை இடையூறுகள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அதில் வெற்றி பெற முடியும். யாரிடத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் சில இக்கட்டான சூழல் நிலவும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வெளியூர் பயணம் செல்வதற்கான முயற்சிகள் கைக்கூடும். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். புது நண்பர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உறுதுணையாக இருப்பர். எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் அதிக சிரமம் இருக்கும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் அவசியம். குடும்பத்தில் புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே இருந்த கருத்து ஒற்றுமை நீங்கும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். கொடுக்கல், வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 15,16,17 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்
கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். சில நேரங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். குடும்பத்தில் பணம் எவ்வளவு வந்தாலும், செலவுகளும் காத்துகொண்டு தான் இருக்கும். புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி காரியங்களில் வெற்றி பெற முடியும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். பயணங்களால் தேவையற்ற செலவுகள் வரும். குடும்ப நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஓயாத அலைச்சல் காரணமாக உடல் அசதியும் சோர்வும் ஏற்படலாம். உங்களுக்கு வந்த பிரச்சனைகள் எல்லாம் பனி போல விலகி நிற்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உற்றார், உறவினர்களின் அன்பு மகிழ்ச்சியை தரும். பூர்விக சொத்துக்களால் ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். குடும்ப வளர்ச்சிக்கான செலவுகள் அதிகம் இருக்கும். எதிரிகளால் பிரச்னைகள் வந்தாலும் அதை திறமையாக சமாளிக்க முடியும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சந்திராஷ்டமம் : 17,18,19 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்
துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எந்த ஒரு பிரச்சனையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் உண்டாகும். உங்கள் திறமையை வெளிப்படுத்தும் நல்ல வாய்ப்புகள் வரும். எதிர்கால திட்டங்கள் நிறைவேறும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியம் இப்போது நடக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைக்கூடும். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். எதிலும் மனதிருப்தியுடன் செயலாற்ற முடியும். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிக்கல் இருக்கும். உடல் சோர்வு நீங்கி, உற்சாகம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடி வரும். மனதில் இருந்த கவலை நீங்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
சந்திராஷ்டமம் : 19,20,21 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். பொருளாதார நிலை உயர்வு தருவதாக அமையும். மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும். குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். புது முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். மருத்துவச் செலவுகள் அவ்வப்போது தோன்றி மறையும். பெண்கள் வழியில் சில பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. கணவன் மனைவிடையே இணக்கமான போக்கு காணப்படும். குடும்பத்தை பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை முற்றிலும் நீங்கிவிடும். மற்றவர்களுக்காக முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். வாகன பயணங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் நல்ல ஒரு அங்கீகாரம் கிடைக்கும். புது தொழில் யோகம் அமையும்.
சந்திராஷ்டமம் : 21,22,23 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்
தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்ப விஷயங்களை மிகவும் கவனமாக கையாளுவும். எதிர்பாராத அதிர்ஷ்டமும், தன வரவுக்கும் வாய்ப்புண்டு. வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக மாறும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். வேண்டியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர முடியும். பாலிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் அவ்வப்போது வரும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் சீராகும். யாரிடத்திலும் வீண் வாக்கு வாதங்களால் பகையை வளர்த்து கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 23,24,25 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்
மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் பழைய அமைதி திரும்பும். பொருளாதார நிலை வெளியில் சொல்லும் படி இருக்கும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். உடல் நிலையிலும், மனநிலையிலும் அதிக கவனம் செலுத்தவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். எதையும் சாதிக்கும் ஆற்றல் உருவாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்றார், உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உடல் நலம் சீராகும். வாகன பயணங்களில் கவனம் தேவை. குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். விலகி நின்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவர். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் ஏற்படும். பெற்றோரின் நலனில் அக்கறைகொள்ளவும். கணவன் மனைவிடையே சின்ன மனவருத்தம் ஏற்படும். வெளியில் கடனாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். உங்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் கூட சாதகமாக இருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்ற நிலை உருவாகும்.
சந்திராஷ்டமம் : 25,26,27,28 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். மற்றவர்களுடன் பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். திட்டமிட்டு செய்ய நினைத்த காரியம் விரைவில் முடியும். எந்த ஒரு செயலையும் முழு மனதோடு செய்தால் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் வரும். குடும்ப பணிகளை கவனமாக மேற்கொள்ளவும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் அவசர முடிவையும், குழப்பத்தையும் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 28,29,30 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படவும். எதையும் சுயமாக சிந்தித்து செயல்படும் திறன் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் வந்து நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் அவசர முடிகளை தவிர்க்கவும். முன் கோபத்தை குறைக்கவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வரவும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். புது நட்பு வட்டாரம் உருவாகும். விஐபிகளின் அறிமுகம் ஆதாயம் தரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோசமான சூழல் நிலவும். உறவினர்கள் உதவி கரம் நீட்டுவர். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். பிரியமானவர்களிடம் இணக்கமான சூழ்நிலை உருவாகும். நெடுதூர பயணங்களை தவிர்க்கவும். உங்கள் விருப்பங்களை எதுவானாலும் அதை நிறைவேற்றிக்கொள்ள இயலும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 3,4,5 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
