போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால், எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
மண்டியிடா வீரமும் வீறு கொண்ட எழுச்சியும்,
“புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் 05.05.1976 ஆம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” எனப் பெயர் சூட்டப்பட்டது.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில் இவ் இயக்கம் வீரம், தன்னொழுக்கம், கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றுடன் படிப்படியாக வளர்ந்து தரைப்படை, கடற்படை, வான்படை ஆகிய முப்படைகளுடன் கரும்புலிப் படையையும் கொண்டு, வெற்றிகள் பல கண்டு, தமிழீழத்தின் பெருமளவான நிலப்பரப்பை மீட்டு, ஓர் அரசுக்குத் தேவையான அனைத்துக் கட்டுமானங்களையும் கொண்ட நிகழ் அரசை நிறுவி நிமிர்ந்து நின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் 50 ஆண்டுகள் வரலாற்றை மீட்டிப் பார்க்கவும் உறுதியெடுக்கவும் அனைவரையும் உரிமையோடு அழைக்கின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
10.05.2026 ஞாயிறு பிற்பகல் 14:00 மணி
Markthalle Burgdorf Sägegasse 40 3400 Burgdorg BE
தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை
079 768 91 25 | 078 686 76 16
STCC, Postfach 9630, 3001 Bern
Swiss-tcc.ch | Info@swiss-tcc.ch
