240
தனித் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் தீர்மானம்.
1976 மே 14ஆம் நாள் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியால் நிறைவேற்றப்பட்ட, தனித் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் தீர்மானமே வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஆகும்.
சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையில் உருவான இத்தீர்மானம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, சுதந்திரமான, இறையாண்மையுள்ள தனி அரசாக ‘தமிழீழம்’ அமைக்கப்படுவதை வலியுறுத்துகிறது.
இத்தீர்மானம் ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஈழத்தமிழர் தமது இருப்பையும் இறைமையையும் பாதுகாப்பதற்கு வேறு தெரிவின்றி ஆயுதப் போராட்டப் பாதையை நோக்கி நகர்ந்தமைக்கு இத்தீர்மானம் வலுச்சேர்த்தது.
வட்டுக்கோட்டைத் தீர்மானம்
VADDUKODDAI RESOLUTION – OUR HOMELAND TAMILEELAM
You Might Be Interested In