கொழும்பு, கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத் திருவிழா, நேற்று கொடியேற்றும் விழாவுடன் தொடங்கியது!

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 192 ஆவது வருடாந்த திருவிழா நேற்று புதன்கிழமை (03-06-2026) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

கொடியேற்றத்திற்கு முன்னதாக நேற்றையதினம் தமிழ், சிங்கள மொழிகளில் காலை 6 மணிக்கு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

கொடியேற்றத்தை தொடர்ந்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தினந்தோறும் நவநாள் வழிபாடுகள் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகின்றன.

இதையடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நற்கருணை ஆராதனை இடம்பெறவுள்ளது.

திருவிழா தினமான 13 ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.

திருவிழா பாடல் திருப்பலிகள் அன்றைய தினம் காலை 8 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் தமிழ் மொழியிலும் காலை 10 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகையின் தலைமையில் சிங்கள மொழியிலும் நண்பகல் 12 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் ஜே.டி.அன்தனி ஆண்டகையின் தலைமையில் ஆங்கில மொழியிலும் ஒப்புக்கொடுக்கப்படும்.

புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் அன்றையதினம் 13 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணியளவில் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்து நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் நிறைவுபெறும்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.