Wednesday, November 4, 2026

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை எப்போது, எந்த நேரத்தில் வெடிக்கலாம்?

சென்னை, தமிழ்நாடு | 04.11.2026

தமிழகத்தில். தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை எப்போது, எந்த நேரத்தில் வெடிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், பின்னர் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க, இந்த 2 மணிநேரம் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது.

Leave a Reply