Home தமிழகம்முதல்வர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் – போலீசார் வழக்குப்பதிவு

முதல்வர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் – போலீசார் வழக்குப்பதிவு

by Amizhthu

ஆகஸ்ட் மாதம் நடந்த திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில், முதல்வர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார்.

சென்னை | 11.11.2026

இது தொடர்பாக தவெக நிர்வாகி முருகன் என்பவர் கீழ்ப்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்எல்ஏ துரை சந்திரசேகருக்கு சம்மனும் அனுப்பியிருந்தனர்.

கீழ்ப்பாக்கம் காவல் துணை கமிஷனர் அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரான திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

You may also like

Leave a Comment