Home தமிழகம்Chennai Weather Reportவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், மீனவர்களுக்குத் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், மீனவர்களுக்குத் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

by Amizhthu

அறிக்கை; வங்கக்கடலில் 13ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது மேலும் வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு கடற்பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீன்பிடி படகுகள் அனைத்தும் நாளை இரவுக்குள் கரைக்கு திரும்ப வேண்டும். மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிப் படகுகள் கடலுக்கு செல்ல அனுமதி இல்லை.

வானிலை எச்சரிக்கைகள், மீனவர் நலத்துறையால் வெளியிடப்படும் அறிவுரைகளை மீனவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment