மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல் 2025 – பிரான்சு


தமிழீழப்பற்றோடும் தாய்மொழிப்பற்றோடும் தனது இறுதிமூச்சுவரை தமிழீழ விடுதலைக்காய்ப் பணியாற்றிய யோகராசா சிறீஸ்கந்தராஜா அவர்கள், 12.10.2025 அன்று உடல்நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி எமக்குப் பெருந்துயரினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ மண்ணை ஆழமாக நேசித்த இவர், தாயகத்தில் சமூக அக்கறையுடன் மொழி, இனவிடுதலை உணர்வோடு தனது இளமைக்காலத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டம் சார்ந்த பல பணிகளை ஆர்வத்தோடு ஆற்றியவராவார். பின்னர், 1981 ஆம் ஆண்டு தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து யேர்மனி நாட்டில் பேர்லின் நகரில் வாழ்ந்துவந்தவராவார்.
இவர், தனது புலம்பெயர்வாழ்வின் ஆரம்பகாலத்தில், தமிழீழ விடுதலைப்போராட்டம் சார்ந்த தாயக நிலவரங்களை அறிந்துகொள்வதற்கு உத்தியோகபூர்வ வானொலி இல்லாத சூழ்நிலையில், ஒலிப்பதிவு செய்யப்பட்ட செய்திகளைத் தொலைபேசிப்பதிவினூடாகத் தமிழ்மக்களுக்குக் கொண்டுசெல்லும் பணியினைச் செய்தவராவார்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குப் பக்கபலமாகப் புலம்பெயர்நாடுகளில் தமிழீழ விடுதலையை நோக்கிய செயற்பாடுகள் கட்டமைப்புரீதியாக முன்னெடுக்கப்பட்டபோது, தன்னையும் ஒரு செயற்பாட்டாளராக யேர்மனிக்கிளையுடன் இணைத்து இறுதிவரை செயற்பட்டவராவார்.
இவர், தனது ஆங்கில மொழியறிவு மூலம் பல்லினமக்கள் மத்தியில், தமிழ்மக்கள் மீது சிங்கள இனவாத அரசு புரிந்த இனவழிப்புப் பற்றியும் தமிழ்மக்களின் அரசியல் உரிமைப்போராட்டம் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, அர்ப்பணிப்போடு பணியாற்றியவராவார்.
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மீதும் ஆழமான பற்றுதல்கொண்டு, போராட்டத்தின் ஆரம்பகாலம் தொடக்கம் தனது இறுதிமூச்சு வரை, தன்னை அர்ப்பணித்துத் தேசவிடுதலைக்காக மிகப்பெரும் பலம் சேர்த்த இவரது இழப்பில் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், யோகராசா சிறீஸ்கந்தராஜா அவர்களின் விடுதலைப்பற்றிற்காகவும் தேசவிடுதலைக்கு அவர் ஆற்றிய பணிகளிற்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

சீன தயாரிப்பு பொருட்கள் இறக்குமதிக்கு, நவ., 1-ம் தேதி முதல் 155 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின், டிரம்ப் உலக நாடுகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விசா கட்டுப்பாடுகள், கூடுதல் வரி விதிப்பு என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, கூடுதல் வரி விதிப்பையும் அமல்படுத்தினார்.
இந்தியாவுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், நம் அண்டை நாடான சீனாவுக்கு, 155 சதவீத வரி விதிக்கப் போவதாக டிரம்ப் கூறியிருந்தார். அந்த முடிவை தற்காலிகமாக ஒத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், சீனா மீது வரி விதிக்கப்படுவது பரிசீலிக்கப்படுமா என்று செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் அளித்துள்ள பதில்:
நான் சீனாவுடன் நட்புறவுடனேயே இருக்க விரும்புகிறேன். ஆனால், வரி விதிப்பில் சீனா எங்களிடம் கடுமையாக நடந்து கொண்டது. சீனாவுடனான வர்த்தகப் போட்டியில், அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
ஸ்மார்ட்போன், மின்சார வாகனங்கள், ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு தேவைப்படும் அரியவகை தனிமங்கள் ஏற்றுமதிக்கு, சீன அதிபர் ஷீ ஜின்பிங் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். மேலும், இதுபோல் கட்டுப்பாடு விதிக்கும்படி உலக நாடுகளுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
உலக நாடுகளை தன் பிடியில் வைத்திருக்க விரும்பும் சீனாவை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எனவே, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் வரும் நவ., 1-ம் தேதி முதல், 155 சதவீத வரி விதிக்கப்படும்.
வரியை தேசிய பாதுகாப்பு கருவியாகவே கருதுகிறோம். இந்த வரி விதிப்பு அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையின் ஒரு பகுதியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கனில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்தனர். ஒரு சில நாட்கள் நடந்த மோதல், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டால் ஆப்கன் – பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்பட தாக்குதல் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், ” இந்தியாவின் மடியில் அமர்ந்து கொண்டு ஆப்கானிஸ்தான், எங்களுக்கு எதிராக செயல்படுகிறது,” எனக்குற்றம்சாட்டியிருந்தார். இதனை மறுத்த இந்திய அரசு, பாகிஸ்தான் தனது சொந்த தோல்விகளை மற்ற நாடுகள் மீது சுமத்துவதாகவும், ஆப்கானிஸ்தான் இறையாண்மை மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் மவ்லாவி முகமது யாகூப் முஜாகித் கூறுகையில், பாகிஸ்தானின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. எங்களின் பிராந்தியத்தை மற்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்துவதை எங்கள் கொள்கை ஆதரிக்காது. ஆப்கன், சுதந்திரமான நாடு என்ற முறையில் இந்தியாஉடன் உறவை பராமரிக்கிறோம். எங்கள்நாட்டின் நலன் அடிப்படையில் உறவை வலுப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால், சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீனா மீது அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டது. ஆனால் தனது நிர்வாகம் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பொறுத்துக் கொள்ளாது. சீனா எங்களை மிகவும் மதிக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் 55 சதவீத வரிகளை செலுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இது நிறைய பணம். தற்போது அவர்களுக்கு புதிய வரிகளை விதிக்கலாம்.
அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் 1ம் தேதி முதல் சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும். அமெரிக்கா புதிய ஏற்றுமதி தடைகளை விதிக்கும்.
மலேசியாவில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், சீனா பொறுப்புடன் செயல்பட வேண்டும். கடந்த காலங்களில் பல நாடுகள் அமெரிக்காவை சாதகமாக பயன்படுத்திக் கொண்டன, ஆனால் அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. அவர்களால் இனி சாதகமாகப் பயன்படுத்த முடியாது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
மேலும், அதிபர் டிரம்ப் கூறியதாவது: இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை ஹமாஸ் நிலைநிறுத்த வேண்டும். நல்லவராக இருங்கள் இல்லையெனில் நீங்கள் அழிக்கப்படுவீர்கள். வன்முறை விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.
வன்முறை குறையும் என்ற நம்பிக்கையில் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு ஒரு சிறிய வாய்ப்பு கொடுக்கும். ஆனால் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தினால் பதிலடி கொடுப்போம். ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை களைவதாக உறுதியளித்தது. ஆனால் காலக்கெடு நிர்ணயிக்கப் படவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்யாவிட்டால், நாங்கள் அதைச் செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
ஜப்பான் பார்லிமெண்ட்டில் கீழவையில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் சனேனே டகாய்ச்சி வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ஆகிறார்.

ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததை அடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தமது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அதன் பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (64) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றியைத் தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே சனே டகாய்ச்சி பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
இந் நிலையில், ஜப்பான் பார்லிமெண்ட்டில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. கீழவையில் நடைபெற்ற மொத்தம் உள்ள 465 ஓட்டுக்களில் 237 ஓட்டுகளைப் பெற்று டகாய்ச்சி வெற்றி பெற்றார்.
இதையடுத்து, அவர் மேலவையில் நடத்தப்படும் ஓட்டெடுப்பிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால் ஜப்பானின் புதிய பிரதமராக ஏற்றுக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஜப்பான் நாட்டின் 104வது பிரதமராக அவர் பதவி ஏற்க இருக்கிறார்.
இதன் மூலம் ஜப்பான் அரசியல் வரலாற்றில் பதவியேற்க உள்ள முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும், பெருமையையும் சனே டகாய்ச்சி பெறுகிறார். ஜப்பானின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் டகாய்ச்சி, மறைந்த பிரிட்டிஷ் பிரதமர் மார்கெரட் தாட்சரை தமது ரோல் மாடலாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங்காங் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு ஏர்ஏசிடி 747-400 விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது.

விமானம் ஒரு தரை சேவை வாகனத்தில் மோதியதாகவும், அதன் சக்கரங்களில் ஒன்றை அறுத்து, பின்னர் கடல் சுவரின் மேல் மூக்கு பதிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்கள் காயமின்றி தப்பினர், ஆனால் தரை வாகனத்தில் இருந்த இரண்டு தரை ஊழியர்கள் காணாமல் போயுள்ளனர்.

ஐரோப்பிய நாடான இத்தாலியின் மிலன் நகரில் இருந்து டில்லி வர, ‘ஏர் இந்தியா’வுக்கு சொந்தமான ஏ.ஐ., 138 என்ற விமானத்தில் ஏராளமான இந்தியர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.
தீபாவளி விடுமுறைக்கு நாடு திரும்பும் வகையில், நேற்று முன்தினம் புறப்படும் விமானத்தில் பயணிக்க அவர்கள் தயாராக இருந்தனர். இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டது.
மாற்று விமானம் தயாராக இல்லாததால், முன்பதிவு செய்த பயணியர் அனைவரும் அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு அடுத்தடுத்து புறப்படும் விமானங்களில் ‘சீட்’ இல்லாததால், மாற்று பயணத்துக்கு திட்டமிட்டவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதனால், தீபாவளி பண்டிகைக்கு அவர்கள் நாடு திரும்ப முடியாத சூழல் நிலவுகிறது. ஒரு சில பயணியருக்கு, இன்று புறப்படும் விமானங்களில் டிக்கெட் கிடைத்துள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாடவே சொந்த ஊர் திரும்ப டிக்கெட் எடுத்திருந்த நிலையில், விமானம் திடீரென ரத்து செய்யப்பட் டதால், அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள், ‘ஏர் இந்தியா’ நிறுவனம் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில், ஏர் இந்தியாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளையும், விமர்சனத்தையும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்கு எதிராக பெரும் திரளான மக்கள், ‘மன்னர்கள் வேண்டாம்’ என்ற வாசகத்துடன் நாடு முழுதும் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக கடந்த ஜனவரியில் அதிபர் டிரம்ப் பொறுப்பேற்றார். அவர் ஆட்சிக்கு வந்த பின், பல்வேறு விவகாரங்களில் புதிய கொள்கை முடிவுகளை எடுத்துள்ளார்.
அவற்றை பார்லிமென்ட் ஒப்புதலின்றி நிர்வாக உத்தரவுகளால் செயல்படுத்தி வருகிறார். இதனால் பலர் அவரை, ‘அதிபர் அல்ல, மன்னர் போல நடக்கிறார்’ என குற்றஞ்சாட்டு கின்றனர்.
புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது, மக்களுக்கான சுகாதார செலவுகளை குறைத்தல், அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்பை குறைத்தல், எதிர்க்கட்சி ஆளும் மாகாணங்களில் ராணுவத்தை பயன்படுத்துதல் போன்றவற்றை சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கு எதிராக நேற்று முன்தினம் அமெரிக்காவின், 2,600 நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஸ்டன், சிகாகோ, அட்லாண்டா, லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டன் என முக்கிய நகரங்களில் மக்கள் வீதிகளில் திரண்டனர்.
‘மன்னர்கள் வேண்டாம்’ மற்றும் ‘போராட்டமே உண்மையான தேசப்பற்று’ ஆகிய பதாகைகளுடன் அவர்கள் பேரணியாக சென்றனர். ‘பாசிசத்தை தடுத்திடுவோம்’ எனவும் கோஷம் எழுப்பினர். நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்பதை குறிப்பதற்காக சிலர் சுதந்திர தேவி சிலை போல் வேடமணிந்து பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறிய தாவது:
அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. சட்டம் இயற்றாமல் புலம்பெயர்ந்தோரை தடுப்பது, நகரங்களுக்குள் ராணுவத்தினரை அனுப்புவது போன்றவை அமெரிக்காவின் அடிப்படை மதிப்புகளுக்கு விரோதமானவை.
டிரம்பை வெறுப்பதால் நாங்கள் இங்கு திரளவில்லை. அமெரிக்காவை நேசிப்பதால் இங்கு உள்ளோம். நாட்டின் ஆட்சி மக்கள் கையில் இருக்க வேண்டும்; மன்னர் கையில் இல்லை. – இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாடு முழுதும் பெரிய அளவில் போராட்டம் நடந்தாலும், அனைத்தும் அமைதியாகவே நடந்து முடிந்தது. எங்கும் பெரிதாக கைது நடவடிக்கைகள் இல்லை. அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
இந்த போராட்டம் குறித்து தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அதிபர் டிரம்ப், ‘அவர்கள் என்னை மன்னன் என்று சொல்கின்றனர். நான் மன்னன் இல்லை’ என்றார்.
டிரம்பின் ஆதரவாளர்கள் ‘இந்த போராட்டம் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் இயக்கத்தால் நடத்தப்படுகிறது. அவர்களால் தான் பார்லிமென்டில் பட்ஜெட் மசோதா நிறைவேறாமல் நாட்டின் அரசு அலுவலகங்கள் முடங்கி உள்ளன. அவர்கள் அமெரிக்காவை நேசிப்பவர்கள் அல்ல; வெறுப்பவர்கள்’ என்றனர்.

தைவானைச் சேர்ந்த இவா ஏர் என்ற விமான நிறுவனத்தில் 34 வயதான சன் என்பவர் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இவர், கடந்த செப்., 24ம் தேதி தைவானில் இருந்து மிலான் நோக்கி சென்ற விமானத்தில் பணியில் இருந்த போது, திடீரென உடல்நலக்குறைவாக பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த அக்.,10ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவால் குடும்பத்தினர் வேதனையில் ஆழ்ந்திருந்த போது, விமான நிறுவனத்தின் அதிகாரி, விடுப்பு ஆவணங்களை அனுப்புமாறு சன்னின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். சன்னின் இறுதிச்சடங்கு நாளில் இந்த செய்தியை பார்த்த அவரது குடும்பத்தினர், இறப்பு சான்றிதழை அனுப்பியுள்ளனர். இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தங்களின் ஊழியரின் செயலுக்கு இவா நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இவா விமான நிறுவனத்தின் தலைவர் சன் சியாமிங் கூறுகையில்,’இந்த சம்பவம் எங்கள் இதயத்தில் வலியை எப்போதும் வலியை ஏற்படுத்தும். சன்னின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’ தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தும், ‘ஆஸ்பெஸ்டாஸ்’ துகள்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, அந்நிறுவனம் பிரிட்டனில் வழக்குகளை எதிர்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனமான, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’ நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வரும் குழந்தைகளுக்கான, டால்கம் பவுடரில், ‘ஆஸ்பெஸ்டாஸ்’ துகள்கள் கலந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
இத்துகள்கள் மனிதர்களுக்கு புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பவுடர்களில் ஆபத்தை ஏற்படுத்தும் துகள்கள் இருப்பது தெரிந்தே விற்பனை செய்ததாக கூறி, அந்நிறுவனத்தின் மீது பிரிட்டனில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
‘டால்க்’ எனப்படும், இயற்கையாக கிடைக்கும் ஒருவகை கனிமத்தில் இருந்து டால்கம் பவுடர்கள் தயாரிக்கப்படுகின்றன. இது பெரும்பாலும், ‘ஆஸ்பெஸ்டாஸ்’ படிமங்களுக்கு அருகில் காணப்படுவதால், டால்க் கனிமத்தை தோண்டி எடுக்கையில் ஆஸ்பெஸ்டாஸ் படிமங்களுடன் கலப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு எடுக்கப்படும் கனிமங்கள் போதிய சுத்திகரிப்பின்றி பயன்படுத்தப்பட்டால், கனிமத்துடன் கலந்துள்ள ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள், புற்றுநோயை உண்டாக்கும் என கூறப்படுகிறது.
கடந்த, 1960ம் ஆண்டு முதலே, ஜான்சன் அண்டு ஜான்சன் பவுடரில் இந்த துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து நிறுவனம் எச்சரிக்கை விடுக்காமல் தொடர்ந்து, தன் தயாரிப்பு துாய்மையானது மற்றும் பாதுகாப்பானது எனக் கூறி சந்தைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த, 1973ம் ஆண்டு பவுடரில் பாதிப்பை ஏற்படுத்தும் கலவைகள் இருந்ததற்கான மிக சிறிய தடயங்கள் இருந்ததாக குறிப்பிட்டதை வழக்கு தொடர்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரிட்டனில் தொடரப்பட்ட வழக்கில் கிட்டத்தட்ட 3,000 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில், அமெரிக்காவில் இதுபோன்று தொடரப்பட்ட வழக்குகளில், 67,000க்கும் மேற்பேட்டோர் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும், ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’ நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதன் தயாரிப்புகளில், ‘ஆஸ்பெஸ்டாஸ்’ துகள்கள் ஒருபோதும் கலந்திருக்கவில்லை என்றும், புற்றுநோயை ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
அதன் தயாரிப்புகள் எப்போதும் ஒழுங்குமுறை விதிகளை பூர்த்தி செய்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கு பிரிட்டனின் வரலாற்றில் மிகப்பெரிய வழக்காக மாறக்கூடும் என்றும், இதற்கான இழப்பீடாக பல நுாற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகள் வரை எட்டும் எனவும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
தொடரும் சட்ட நெருக்கடிகள் காரணமாக, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’ நிறுவனம் டால்க் அடிப்படையிலான குழந்தைகள் பவுடர் விற்பனையை, 2020ல் அமெரிக்காவிலும், பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் 2023ம் ஆண்டிலும் நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக சோளமாவு அடிப்படையிலான மாற்று தயாரிப்புக்கு மாறியுள்ளது.
பிரிட்டன் வழக்கு, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’ டால்க் தயாரிப்புகள் மீதான உலகளாவிய சந்தேகங்களையும், சட்டரீதியிலான அழுத்தத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.
வங்கதேசத்தில், கடந்த 1971ம் ஆண்டு நடந்த அந்நாட்டு விடுதலை போரில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு, அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இடஒதுக்கீடு இரண்டு தலைமுறைகளை கடந்தும் தொடர்ந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இப்போராட்டம் மக்கள் எழுச்சியாக மாறியது.
தொடர் போராட்டம் காரணமாக, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து, 2024 ஆகஸ்ட் 5ல், பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.
கடந்த ஆட்சியின் போது, அரசியல் எதிரிகளை, கடத்துதல், சித்தரவதை செய்தல், ஆட்களை கட்டாயமாக காணாமல் ஆக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், 16 ராணுவ அதிகாரிகள் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா உள்ளிட்ட, 14 பேருக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது.
இதில், 16 ராணுவ அதிகாரிகளில் 15 பேர் ராணுவ காவலில் வைக்கப்பட்டனர். ஒருவர் தலைமறைவானார்.
கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரிகள் சிவில் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்களா அல்லது ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்களா என்பதில் கருத்து வேறுபாடும், பதற்றமும் நிலவியது.
இதையடுத்து, முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சியான பி.என்.பி., எனப்படும், பங்களாதேஷ் தேசியவாத கட்சி, இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுசுக்கு, ராணுவத்துடன் நல்லுறவை பேணி பராமரிக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது:
ராணுவத்தை பகைத்துக் கொள்வது நாட்டில் ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும். வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நாடு எந்த ஒரு ஆபத்தையும் தாங்காது. ஆகையால், அரசு சமநிலையுடன் இருக்கவேண்டும். ராணுவத்துக்கும், இடைக்கால அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், வீழ்த்தப்பட்ட சர்வாதிகாரிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் குழப்பத்தை உருவாக்கி அனுகூலம் தேடலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
வீழ்த்தப்பட்ட சர்வாதிகாரிகள் என ஷேக் ஹசினாவையும், ஆதரவாளர்கள் என அவரது கட்சியினரையும் சுட்டிக்காட்டியுள்ளது-. இந்த எச்சரிக்கை, அரசியல் கட்சிகளுடன் யூனுஸ் நடத்திய அவசர கூட்டத்தின் போது, பி.என்.பி.,யின் நிலைக்குழு உறுப்பினரான சலாவுதீன் அகமதுவால் விடுக்கப்பட்டது.
