Home புலம்பெயர் தமிழர்கள்தமிழீழத் தேசிய நாட்டுப்பற்றாளர் நாள் 2026 – பெல்ஜியம்

தமிழீழத் தேசிய நாட்டுப்பற்றாளர் நாள் 2026 – பெல்ஜியம்

by Amizhthu
Woman speaking into a microphone at a lectern, with a red banner featuring a roaring tiger behind her and framed portrait photos with flowers on the table.

தமிழீழத்  தேசிய நாட்டுப்பற்றாளர் நாள் தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு சிங்கள இந்திய ஒப்பந்த காலத்தில் அமைதி படை என்ற போர்வையில் தாயகம் வந்த இந்தியப்படை வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களிற்கு எதிராகவும் ,தமிழீழ விடுதலை போராட்டத்தை வழிநடத்திய தமிழீழ விடுதலை புலிகளிற்கு எதிராகவும் மனிதாபிமான மற்ற இன அழிப்பை சிறீலங்க இனவெறி இராணுவத்தின் துணையுடனும் ,தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு எதிராக செயற்பட்ட ஆயுத துரோக கும்பல்களின் ஆதரவுடனும் கட்டவிழ்த்து விட்டிருந்தது. 

அக்காலப்பகுதியில் அன்னையர் முன்னனியில் செயற்பாட்டாளராக கடமையாற்றிவந்த அன்னை பூபதி அம்மா 19.03.1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் அடாவடித்தனத்தை பொறுக்க முடியாது வெகுண்டெழுந்து இரண்டு அம்சக்கோரிக்கைகளான இந்தியப்படை ஈழத்தில் நடாத்தும் போரை உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும், விடுதலைப்புலிகளுடன் பேசி தீர்வு காண வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து 19.04.1988 ஆம் ஆண்டு ஈகைச்சாவடைந்தார் .

 அவருடைய நினைவு நாளில் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு பக்கபலமாக நின்று சாவடைந்தவர்களையும் தமிழீழத் தேசியத்தலைவரால் நாட்டுப்பற்றாளர் நாளாக பிரகடனபடுத்தப்பட்டு வருடம் தோறும் நினைவு எழிச்சி நாளாக நினைவு கூரப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 19.04.2026 அன்று பெல்சியத்தில் அன்ற்வேற்பன் மாநிலத்தில் உணபூர்வமாக முதன்மை நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி எழுச்சி நிகழ்வுகள் இடம் பெற்று நிறைவாக தமிழீழத்தேசியக்கொடி கையேந்தலுடன் “தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் “எனும் தாரகமந்திரத்துடன் நிறைவு பெற்றது.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00