Here are the full details of the 221 individuals banned by the Sri Lankan government.





















📩 Contact Us For questions about refunds or returns, reach out to our support team: Email: amizhthu.com@gmail.com Dismiss
வர்த்தமானி வெளியீட்டின்படி, இலங்கையில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 17 தமிழ் மற்றும் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட 221 நபர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் உட்பட 11 முஸ்லீம் அமைப்புகள் 6 தமிழ் அமைப்புகள், மற்றும் முஸ்லிம்கள் 106 பேர் தமிழர்கள் 95 பேர் சிங்களவர்கள் 4 பேர் உட்பட 221 பேர் பயங்கரவாத்துடன் தொடர்புடையவர்கள் என தடை செய்யப்பட்டவர்கள் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் நபர்கள் மற்றும் அமைப்புகள் திருத்தப்பட்ட பட்டியல் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 2026 ஆண்டு ஜனவரி 06 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ், பெயரிடப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2014, மார்ச் 21, ல் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட சில பெயர்கள் நீக்கப்பட்டு 2025, டிசம்பர்,19 புதிய பெயர்கள் உள்ளடக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தமிழ் புனர்வாழ்வு கழகம்,
தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC.),
உலக தமிழர் இயக்கம்,
நாடு கடந்த தமிழீழ அமைப்பு,
உலகத் தமிழர் நிவாரண நிதியம்,
எச்..கியூ தமைக்குழு,
உட்பட 95 தனிநபர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இதேவேளை கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ், ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (யு.ரி.ஜே.) சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (சி.ரிஜே) ஸ்ரீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (எஸ்.எல்.ரி.ஜே) அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ஏ.சி..ரி.ஜே) ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (ஜே.ஏ.எஸ்.எம்) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம்-ஈ- அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மற்றும் தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குர்ஆன் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்த பாவியா, ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (எஸ்.எல்.ஜ.எஸ்.எம்) மறுபெயர் ஜம்இய்யா, ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ஜ.எஸ்.ஜ.எஸ்) மறுபெயர் அல்-தௌலா அல்- இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா, அல்கொய்தா அமைப்பு, சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம், சுப்பர் முஸ்லிம் அமைப்பு ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட அமைப்புக்களின் உறுப்பினரொருவராக அல்லது அங்கத்தவரொருவராக இருத்தலாகாது, அதற்குத் தலைமைத்துவம் அளித்தலாகாது, சீருடையை, உடையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோ அல்லது உடைமையில் வைத்திருத்தலோ, கூட்டமொன்றை அழைத்தலோ, கூட்டுதலோ, நடாத்துதலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ உறுப்பாண்மையைப் பெறுதலோ அல்லது அதைச் சேருதலோ ஓர் உறுப்பினருக்கு, அங்கத்தவருக்கு அல்லது வேறெவரேனும் இணையாளருக்குப் புகலிடமளித்தலோ, அவரை மறைத்துவைத்தலோ அல்லது அவருக்கு உதவுதலோ ஆகாது,
மேம்பாட்டுக்கு உதவுதலோ, அதனை ஊக்குவித்தலோ, அதற்கு ஆதரவளித்தலோ, மதியுரையளித்தலோ, உதவுதலோ அல்லது அதன் சார்பில் செயலாற்றுதலோ ஏதேனும் செயற்பாட்டை அல்லது நிகழ்வை ஒழுங்குபடுத்தலோஅல்லது அதில் பங்குபற்றுதலோ பணத்தை அல்லது பொருட்களை நன்கொடையளித்தலோ அல்லது உதவுதொகையளித்தலோ அதற்காக அல்லது அதன் பொருட்களைப் பெறுதலோ, களஞ்சியப்படுத்தலோ, இடம்பெயர்த்தலோ, உடைமையில் வைத் திருத்தலோ அல்லது விநியோகித்தலோ நோக்கத்தை ஊக்குவித்தலோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்த லோஅதனோடு ஏதேனும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடலாகாது, அல்லது அதன் சார்பில் தகவலைப் பரப்புவித்தலாகாது, என வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு சிலருக்கு மட்டும் இழப்பீடு வழங்குவதன் மூலம் செம்மணி பிரச்சினையை கை கழுவ முயற்சி; காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் மரண தண்டனை கைதி சோமரத்ன ராஜபக்ஷ குற்றம் சாட்டுகிறார்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினர் செம்மணி படுகொலை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளாமல், காணாமல்போனோரில் சிலரது குடும்பங்களுக்கு இழப்பீட்டுத்தொகையை வழங்கி, அவ்விவகாரத்தை முடிவுக்குக்கொண்டுவந்து, கைகழுவி விடுவதற்கே முயற்சிப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.
அதனையடுத்து இதுபற்றிய மேலதிக விபரங்களைக் கேட்டறியும் நோக்கில் கடந்த ஆண்டு ஓகட்ஸ் மாதம் 18 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள், மீண்டும் இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்தனர்.
இச்சந்திப்பு தொடர்பில் தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ தன்னிடம் கூறியதாக, அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம எமக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்திய விடயங்கள் வருமாறு:
யாழ், செம்மணி மனிதப்படுகொலை தொடர்பான விபரங்களைக் கேட்டறியும் நோக்கில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை (9) எனது கணவரை வெலிக்கடை சிறைச்சாலையில் சந்தித்தனர்.
அதன்படி அவ்வலுவலகத்தின் தலைவரினால் எனது கணவரிடம் கூறப்பட்ட விடயங்களின் பிரகாரம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினர் செம்மணி படுகொலை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளாமல், காணாமல்போனோரில் சிலரது குடும்பங்களுக்கு இழப்பீட்டுத்தொகையை வழங்கி, அவ்விவகாரத்தை முடிவுக்குக்கொண்டுவந்து, சர்வதேச சமூகத்தின் மத்தியில் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை சீரமைப்பதற்கே அவர்கள் முயற்சிக்கின்றனர் என்ற விடயம் தெளிவாகப் புலப்பட்டதாக எனது கணவர் கூறினார்.
செம்மணி மனிதப்புதைகுழி குறித்து 09.07.2025 அன்று எனது கணவர் சார்பில் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்ததுடன் 04.10.2025 அன்று இவ்விவகாரம் தொடர்பில் எனது கணவர் அவரது சட்டத்தரணி ஊடாக சத்தியக்கடதாசி ஒன்றையும் வழங்கியிருந்தார்.
அதில் அவர் 1996 ஆம் ஆண்டளவிலே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் அரசாங்கம் இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, சொற்பளவானோருக்கு இழப்பீட்டை வழங்கி, இவ்விவகாரத்தைக் கைகழுவி விடுவதற்கே முயற்சிக்கின்றது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை தபால் திணைக்களமானது இலாபம் ஈட்டும் துறையாக அபிவிருத்தி அடைந்து உள்ளது. 2025ஆம் ஆண்டுக்காக திறைசேரியில் இலங்கை தபால் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வருமான இலக்கை விட அதிக வருமானம் ஈட்டுவதில் தபால் திணைக்களம் வெற்றி பெற்றுள்ளதாக தற்போதைய தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதன்படி, இலங்கை தபால் திணைக்களம் 13.1 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், கடந்த வருடத்தில், இலங்கை தபால் திணைக்களம் புதிய ஆட்சேர்ப்புகளையும் நிரந்தர நியமனங்களையும் செய்துள்ளது. அத்துடன், புதிய தபால் அலுவலகங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, இலங்கை தபால் சேவையின் 378 பிரதி தபால் மா அதிபர்களுக்கு 2025 ஜூன் மாதம் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும், 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரதி தபால் மா அதிபர்களுக்கான முதல் நிரந்தர நியமனம் இதுவாகும்.
கடந்த வருடம் செப்டம்பரில், 2022ஆம் ஆண்டுக்குப் பின்னர் 1000 தபால் உதவியாளர்களின் நியமனங்கள் நிரந்தரமாக்கப்பட்டதாகவும், 600 தபால் சேவை அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும், இந்த வருடம் பெப்ரவரியில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும்.
ஆட்சேர்ப்பு விவரங்களை தெரிவித்த தபால் மா அதிபர், முதன்மை திறன் அதிகாரி பிரிவில் 40 தரம் ஐஐஐ அஞ்சல் பதவிகளுக்கு பணிமயர்த்த கடந்த வருடம் நவம்பரில் நியமனங்கள் வழங்கப்பட்டது.
இலங்கை தபால் திணைக்களம் 2021 முதல் எந்த நிரந்தர அஞ்சல் உதவியாளர் ஆட்சேர்ப்புகளையும் செய்யவில்லை, மேலும் 1000 பதவி வெற்றிடங்களுக்கு பணிமயர்த்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விடுத்த கோரிக்கையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. தேவையான தகுதிகளை பூர்த்தி செய்து தபால் திணைக்கயளத்தின் ஊழியர்களாக பதிவு செய்யப்பட்ட 731 பேர் கடந்த வருடம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், பொதுமக்களுக்கு திறமையான அஞ்சல் சேவையை வழங்கும் நோக்கில், கடந்த வருடம் 225 கணினிகள், பிரதி அஞ்சல் அதிகாரிகளுக்கு 1500 மடிக் கணினிகள், 500 அச்சுப்பொறிகள் மற்றும் 32 லேசர் அச்சுப்பொறிகள் திணைக்களத்திற்கு வாங்கப்பட்டதாக ருவன் சத்குமார தெரிவித்தார்.
இலங்கை தபால் சேவையை புதிய செயல்திறன் நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த கடந்த வருடம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை அஞ்சல் திணைக்கள போக்குவரத்திற்காக 10 புதிய பெரிய லொரிகள் மற்றும் 20 புதிய கெப்ரக வாகனங்கள் கொள்வனவு செய்ய உள்ளதாகவும், ஞளுகு நிதியின் கீழ் வழங்கப்பட்ட கூ500,000 ஐப் பயன்படுத்தி 20 மின்சார சரக்கு முச்சக்கர வண்டிகள் மற்றும் 165 மின்சார மோட்டார் சைக்கிள்களை வாங்க கொள்முதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொலன்னறுவை புதிய தபால் நிலையமும் கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், தபால் தலைமையகம், மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம் பொலன்னறுவை தபால் வளாகம் மற்றும் மட்டக்களப்பு தபால் வளாகம் ஆகியவற்றில் சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதாக தற்போதைய தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.

2023 இல் அப்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடிய தேசிய மக்கள் சக்தி, இப்போது பாதுகாப்புத்தரப்பினரின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அதனையொத்த சட்ட வரைவையே பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு எனும் பெயரில் வெளியிட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் வரைவில் முன்னைய திருத்தச் சட்டமூலங்களை விடவும் மோசமான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும், பயங்கரவாதத்தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதை விடுத்து, அதனைப் பதிலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாகவும் சுமந்திரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதிய சட்ட வரைவின் உள்ளடக்கங்கள் குறித்துத் தாம் ஆராய்ந்து வருவதாகவும், அதற்கமைய இவ்வரைவின் உள்ளடக்கங்களில் பெரும்பாலானவை கடந்த 2023 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் உள்ளடக்கங்களையே ஒத்திருப்பதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
அவ்வேளையில் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தேசியமக்கள் சக்தியின் சார்பில் இப்போது வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகிக்கும் விஜித்த ஹேரத் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் இப்போது அதன் உள்ளடக்கத்திலிருந்து பெருமளவுக்கு மாறுபடாத புதிய வரைவை அரசாங்கம் முன்மொழிந்திருக்கிறது என அவர் கரிசனை வெளியிட்டார்.
அதுமாத்திரமன்றி இப்புதிய வரைவைத் தயாரித்த நிபுணர் குழுவில் அங்கம் வகித்த பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள், பயங்கரவாத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு இப்புதிய வரைவு கூடப் போதுமானதல்ல என முரண்பட்டதாக அறியக்கிடைத்ததாகச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், எனவே எதிர்க்கட்சியாக இருந்தபோது முன்னிறுத்திய தமது கொள்கையைப் புறந்தள்ளிட்டு, இப்போது அரசாங்கம் பாதுகாப்புத்தரப்பினரின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இவ்வரைவை வெளியிட்டிருப்பதாக விசனம் வெளியிட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் புதிய வரைவின் உள்ளடக்கம் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்ததன் பின்னர், வெகுவிரைவில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி நிதியமைச்சுக்குக் கடிதம் அனுப்பிவைப்போம் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
சிலாபம் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று சனிக்கிழமை (10-01-2026) மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 1,620 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கோனவில பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலிவத்த பிரதேசத்தில் வாள்களுடன் இளைஞன் ஒருவன் மட்டக்குளி பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (09-01-2026) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரான இளைஞனிடமிருந்து 10 வாள்களும் 16 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் முன்பாக 09’ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதில் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார்.

ஹோட்டலுக்கு முன்பாக மது அருந்திக் கொண்டிருந்த இரு நபர்கள், ஹோட்டல் உரிமையாளரை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழமுக்கம் நேற்று நாட்டுக்குள் பிரவேசிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் நகர்வு பாதையில் மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அது புயலாக வலுப்பெறுவதற்கான அறிகுறிகளும் இல்லை. எனவே பெரும்பாலான பிரதேசங்களில் எதிர்பார்க்கப்பட்ட கன மழை வீழ்ச்சி குறைவாகவே காணப்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (09-01-2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழமுக்கமானது நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்புக்கு கிழக்காக சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது. இந்த தாழமுக்கம் நேற்று மாலை 5.30 – 11.30க்கு இடையில் நாட்டுக்குள் பிரவேசிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது பயணிக்கும் பாதையில் மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய திருகோணமலை கரையோரத்தின் ஊடாக இப்பகுதி நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடும். எனவே எதிர்பார்க்கப்பட்டளவு கடும் மழை வீழ்ச்சி பதிவாகாது. இத்தாழமுக்கம் புயலாக வலுப்பெறுவதற்கான அறிகுறிகள் இல்லை. எனவே வடக்கு, வடமத்திய, வடமேல் உள்ளிட்ட மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யும். இந்த மாகாணங்களிலுள்ள சில மாவட்டங்களில் 100 மில்லி மீற்றரை அண்மித்தளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.
இவை தவிர ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இம்மாகாணங்களில் 50 – 75 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். ஏனைய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யும். எவ்வாறிருப்பினும் காற்றின் வேகமானது அவ்வாறே காணப்படுகிறது.
குறிப்பாக மத்திய மழை நாட்டை அண்மித்த பகுதிகளிலும், தென் மாகாணத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் போக்கு குறைவடைந்துள்ள போதிலும், ஏனைய மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை காணப்படும். மீன்பிடி மற்றும் கடற்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து அம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளிலும் கடற்றொழில் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு தொடர்ந்தும் அறிவுறுத்தப்படுகிறது. இங்கு மாத்திரமின்றி ஏனைய கடற்பகுதிகளிலும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொறுத்தமற்றது. இன்று சனிக்கிழமையுடன் மழை வீழ்ச்சி படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் படிப்படியாக பலவீனமடைந்து நாட்டைக் கடந்து செல்லும் என்றார்.
வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் திருகோணமலையின் வடக்கு – வடகிழக்குத் திசையில் சுமார் 100 km தொலைவில் இன்று காலை 4.00 மணியளவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது இன்று சுமார் 5.30 மணியளவில் நலிவடைந்து தாழ் அமுக்கமாக மாறுவதுடன் வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும். இன்று நன்பகல் அளவில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையாக இலங்கை கரையை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் வட அரைப் பகுதியில் வானம் முகில் செறிந்து காணப்படும்.
வட மாகாணத்திலும் அத்துடன் புத்தளம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .
வட மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 50 – 60 km வேகத்தில் அடிக்கடி மிகப் பலத்த காற்று வீசக் கூடும். சில வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 km ஆக அதிகரித்தும் காணப்படும். வடமேல் மாகாணத்திலும் அத்துடன் மாத்தளை, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 – 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 35 – 45 km வேகத்தில் வட திசையில் இருந்து காற்று வீசும்.
கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 – 70 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாக் காணப்படும்.
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 – 3.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.
“கழிவற்ற நகர் – ஆரோக்கியமான வாழ்வு” எனும் தொனிப்பொருளில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, சுகாதார அமைச்சுடன் இணைந்து ஜனவரி 7 ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இன்று இத்திட்டத்தின் இறுதிநாளாகும். மழைக் காலங்களில் ஏற்படும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தித்வா சூறாவளி மற்றும் அதன்பின்னர் தொடர்ச்சியாக நிலவிவரம் மழையுடனான வானிலை காரணமாக, 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 4,931 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 6 நாட்களில் மாத்திரம் 1,598 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
ஆகையால் இந்நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் நோக்கில், சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு மற்றும் கல்வி, பாதுகாப்பு ஆகிய அமைச்சுகளின் பங்களிப்புடன் இந்த மூன்றுநாள் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனவரி 7 ஆம் திகதி மத வழிபாட்டுத் தலங்களிலும், ஜனவரி 8 ஆம் திகதி பாடசாலை உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை சுத்தப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இறுதி நாளான இன்று (9) அரச மற்றும் தனியார் நிறுவனங்களை மையப்படுத்திய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இவ்வேலைத்திட்டம் நாட்டின் 341 உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் ரணதுங்கவின் பங்கேற்புடன் அம்பாந்தோட்டை, தங்காலை மற்றும் ரன்ன பகுதிகளில் வைத்தியசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களைச் சுத்திகரித்தல், புகை விசிறல் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.