Sunday, November 1, 2026
Home செய்திகள்இலங்கைWeather - வானிலைதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம், சூறாவளியாக வலுவடைந்து வருகிறது: கடற்படையினருக்கும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம், சூறாவளியாக வலுவடைந்து வருகிறது: கடற்படையினருக்கும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

by Amizhthu

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு வலயம், இன்று ( 01) ஞாயிற்றுக்கிழமை காலை 05.30 மணியளவில் தீவிர காற்றழுத்த தாழ்வு தீவிரமடைந்துள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம்  காலை நிலவரப்படி, இத்தொகுதி வட அட்சரேகை 11.5°N மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 86.4°E பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நண்பகல் 11.30 மணியளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக தீவிரமடைந்துள்ளது.   

தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து கடும் புயலாக  உருவெடுத்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (03) காலை 05.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால், கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

அட்சரேகை 10N – 15N மற்றும் தீர்க்கரேகை 80E – 90E ஆகிய எல்லைகளுக்குட்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அப்பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கப்பல்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Reply