Sunday, November 1, 2026
Home தமிழகம்தமிழக முதல்வர் விஜய், வரும் 3-ம் தேதி பெருந்துறையில்

தமிழக முதல்வர் விஜய், வரும் 3-ம் தேதி பெருந்துறையில்

by Amizhthu

 தமிழக முதல்வர் விஜய், வரும் 3-ம் தேதி பெருந்துறையில் ரூ.1,100 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

திருப்பூர் அடுத்த விஜயமங்கலத்தில் இன்று (அக்.,31) அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ரூ.1,100 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ளன. இவற்றை வரும் 3-ம் தேதி பெருந்துறையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. அண்மையில் சென்னையில் பெய்த கனமழையின்போதுகூட, நான்கு மணி நேரத்தில் மழைநீர் முழுமையாக வடிந்துசெல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதேபோல், மாநிலம் முழுவதும் மழை பாதிப்புகளைச் சமாளிக்க அனைத்துத் துறைகள் சார்பிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முதல்வர் வாரம் இருமுறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறார். இயற்கையை நம்மால் எதிர்க்க முடியாது. ஆனால், அதன் சீற்றத்தை எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிறைக் கைதிகள் தப்பிய விவகாரம் குறித்து சட்டத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. – இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Reply