Home செய்திகள்தமிழீழம்ஈழத்தின் வரலாறுமாவீரர்களின் வித்துடல்களை மீட்க குடும்பிமலையில் நடந்த பெருஞ்சமர்.

மாவீரர்களின் வித்துடல்களை மீட்க குடும்பிமலையில் நடந்த பெருஞ்சமர்.

by Amizhthu

09.04.1991 அன்று கரடியனாறு முகாமிலிருந்து புலுட்டைமானோடை வழியாக மியான்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகளால் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சிறிலங்கா வான்படையின் உலங்கு வானூர்தியின் தொடர்ச்சியான தாக்குதலுக்கும் மத்தியில் விடுதலைப் புலிகளால் சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தினர். இத் தாக்குதலின்போது 20 போராளிகள் வீரச்சாவைத்தழுவிக் கொண்டனர்.

இத்தாக்குதலின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்கள் மீட்கப்படாமையால் மறுநாள் காலை வித்துடல்களை மீட்க முற்பட்டபோது சிறிலங்கா படையினருடன் கடுமையான சமர் ஏற்பட்டது.  காலை 7 மணி முதல் 10 மணிவரை நடைபெற்ற கடுமையான சமரின்போது சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சு வானூர்திகள் குண்டு வீச்சிற்கும், வான் படை உலங்கு வானூர்தியின் தொடர்ச்சியான தாக்குதலுக்கும் மத்தியில் விடுதலைப் புலிகள் தீரமுடன் களமாடி சிறிலங்கா படையினருன் பலத்த இழப்புக்களை ஏற்படுத்தினர்.

இந்தச் சமரின்போது 15 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். விடுதலைப் புலிகளின் இத் தாக்குதல்களையடுத்து சிறிலங்கா படையினரின் அப்பகுதிகளிலிருந்து பின்வாங்கிச் சென்றனர்.

முதல் நாள் மோதலில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரம்

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00