09.04.1991 அன்று கரடியனாறு முகாமிலிருந்து புலுட்டைமானோடை வழியாக மியான்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகளால் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சிறிலங்கா வான்படையின் உலங்கு வானூர்தியின் தொடர்ச்சியான தாக்குதலுக்கும் மத்தியில் விடுதலைப் புலிகளால் சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தினர். இத் தாக்குதலின்போது 20 போராளிகள் வீரச்சாவைத்தழுவிக் கொண்டனர்.
இத்தாக்குதலின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்கள் மீட்கப்படாமையால் மறுநாள் காலை வித்துடல்களை மீட்க முற்பட்டபோது சிறிலங்கா படையினருடன் கடுமையான சமர் ஏற்பட்டது. காலை 7 மணி முதல் 10 மணிவரை நடைபெற்ற கடுமையான சமரின்போது சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சு வானூர்திகள் குண்டு வீச்சிற்கும், வான் படை உலங்கு வானூர்தியின் தொடர்ச்சியான தாக்குதலுக்கும் மத்தியில் விடுதலைப் புலிகள் தீரமுடன் களமாடி சிறிலங்கா படையினருன் பலத்த இழப்புக்களை ஏற்படுத்தினர்.
இந்தச் சமரின்போது 15 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். விடுதலைப் புலிகளின் இத் தாக்குதல்களையடுத்து சிறிலங்கா படையினரின் அப்பகுதிகளிலிருந்து பின்வாங்கிச் சென்றனர்.
முதல் நாள் மோதலில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரம்
- இலங்கையில் சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டம்: மக்கள் மீதான பாதிப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை – நளிந்த
- இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு வயது வரம்பு விதிப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்: ஆலோசகர் கருத்து
- த.வெ.க. வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட 115 பேரை தலைமை அலுவலகத்திற்கு வருமாறு கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
- த.வெ.க தலைவர் விஜய்யின் தந்திரமான அரசியல்!
- போராட்டக்காரர்களின் உடலைப் பெற குடும்பங்களிடம் பணம் கோரப்படுவதாக குற்றச்சாட்டு
- மாவீரர் நாள் சிறப்பு வெளியீடு 2025 பிரித்தானியா

