காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஏறாவூர்ப்பற்று செங்கலடி – பிரதேச செயலகத்தில் குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் வெள்ளிக்கிழமை (12.09.2025) அங்கு -வாழைச்சேனை, கிரான், வாகரை, செங்கலடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 35 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகை தந்த 33 பேரிடம் விசாரணைகள் இடம்பெற்றன.
காணமற்போன ஆட்களின் உறவினர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை காணாமற்போன ஆட்கள் பற்றிய கொழும்பு பிராந்திய அலுவலகத்தில் இருந்து வருகை தந்த வடிவேல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தம்பிஐயா யோகராஜா ஆகியோர் தலைமையிலான அலுவலக உத்தியோகத்தர்கள் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் இன்றைய தினம் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
- ஆறாம் வகுப்பின் முதல் செமஸ்டருக்கான பாடப்புத்தகங்கள் அகற்றப்படவில்லை அல்லது நிராகரிக்கப்படவில்லை. – இலங்கை பிரதமர்
- இலங்கையில் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் சமூக ஊடகங்களில் பல போலியான தகவல்கள் பரவி வருகின்றன.
- இலங்கைத் தீவு முழுவதும் சுமார் 15,000 நிலச்சரிவு அபாயப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன!
- சாயல்குடியில் சாலையில் கிடந்த தங்கச் செயினை போலீஸில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர்களை போலீசார் பாராட்டி கவுரவித்தனர்.
- அகவை வாழ்த்து – அக்டோபர் 27
- “புலிகள் செம்மணியில் குழந்தைகளைப் புதைத்திருக்க மாட்டார்கள்” – வணக்கத்திற்குரிய சன்னி ஞானந்த தேரரின் கூற்று!






