சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூருவுக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. காஞ்சிபுரம் கடந்து வேலூர் அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இயந்திர கோளாறு கண்டறியப்பட்டது.
இதையடுத்து விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் 160 பேரும் மாற்று விமானம் மூலமாக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- Switzerland Conference – Political–Historical Analysis
- விஜய் ஆட்சி அமைத்தால் பேரழிவு: தினகரன் கடும் கோபம்
- தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- கனடா–சீனா வர்த்தக உறவுகள் மீண்டும் சீராக்கம்: மின்சார வாகனங்கள் மற்றும் கனோலாவுக்கு சுங்கக் கட்டணங்கள் குறைப்பு
- இலங்கையின் அஞ்சல் துறை 2025 ஆம் ஆண்டில் 13.1 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது!
- துபாய்-ஹைதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
பயணிகள் சரியான நேரத்திற்கு தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். சமீபகாலமாக விமானத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது பயணியரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.