ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதனை வாங்குவதற்காக மும்பை பிகேசி ஆப்பிள் ஸ்டோரில் இன்று அதிகாலை முதலே மக்கள் வரிசையில் நின்று வருகின்றனர்.

ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என நான்கு மாடல் போன்கள் அறிமுகமாகி உள்ளன. இது கடந்த 9ம் தேதி கலிபோர்னியாவின் கியூபெர்டினோ நகரில் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஐஓஎஸ் 26 இயங்குதளத்தில் இந்த போன்கள் வெளியாக உள்ளன. இது ஐபோன் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறை ஐபோன் 17 போன்களின் விலை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் இன்று இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் ஐபோன் 17 மாடல்களின் விலை ரூ.89,000 முதல் தொடங்கும் என தகவல் தெரிவிக்கின்றன.
- காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம் வரலாற்றுச் சிறப்பு மிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து: உலக பொருளாதாரத்தில் புதிய அத்தியாயம்
- ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கே.டி. ராமராவ் மற்றும் பிறருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
- இஸ்ரேல் உடனான இந்திய உறவு வலுவானது என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
- உத்தரப்பிரதேசத்தில் காரும் சரக்கு லாரியும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
- ஜாமீன் என்பது அரசியல் உரிமை; தண்டனை அல்ல: முன்னாள் தலைமை நீதிபதி டி.வை. சந்திரசூட் வலியுறுத்தல்
இந்த நிலையில், இந்த போனை வாங்குவதற்காக, மும்பை பிகேசி ஆப்பிள் ஸ்டோர் முன்பு மக்கள் குவிந்து வருகின்றனர். நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.