தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் 20’ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் 20ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு வரலாற்று ஆவணக் காட்சியகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆவண காட்சியகத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை மூத்த போராளி பஷீர் காக்காவால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
- கனதர ஓயாவில், ரி-56 ரக 41 வெடிமருந்து பொருட்கள் மற்றும் 2 வெடிமருந்து உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- அகவை வாழ்த்து – செப்டம்பர் 19
- நினைவு வணக்கம் | ஜனவரி 10
- மாஸ்கோவில் மீண்டும் நடந்த உயிரிழப்பு தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன்–அமெரிக்கா புதிய சமாதான திட்டத்தில் ஒப்புதல்
- நாஞ்சில் சம்பத்தின் தொழில் நேர்மை!
- ஓமந்தை வேப்பங்குளம் அரச ஊழியர் வீட்டுத்திட்டத்திட்ட பகுதியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை நடாத்தினர்.
தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள், பத்திரிகை ஆவணங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.













