” எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால், அந்நாடு வரைபடத்தில் கூட இருக்காது,” என ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார்.

ராஜஸ்தானின் அனுப்கார்க் நகரில் உள்ள ராணுவ முகாமில் அவர் பேசியதாவது:
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ 1.0 ன் போது காட்டப்பட்ட கட்டுப்பாடு இனியும் இருக்காது. புவியியல் ரீதியில் இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என சிந்திக்கும் அளவுக்கு இந்திய ராணுவத்தின் நடவடிக்கை இருக்கும். புவியியலில் ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்பினால், அந்நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும். வீரர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். கடவுள் விரும்பினால், உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு உபேந்திர திவேதி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ‘ ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, சிறப்பாக பணியாற்றிய பிஎஸ்எப் 140வது பட்டாலியன் கமாண்டான்ட் பிரபாகர் சிங், ராஜ்புத்னா ரைபிள்ஸ் மேஜர் ரிதேஷ்குமார் மற்றும் ஹவில்தார் மோகித் கெய்ரா ஆகியோருக்கு சிறப்பு அங்கீகாரம் அளித்து ராணுவ தளபதி பாராட்டினார்.
- மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு நிலம் வழங்க அமிர்தாஞ்சன் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
- வடகிழக்கு சிரியாவில் ரத்தப்பாசறை நிறுத்தம்: கடும் மோதல்களுக்கு பின் அரசு–SDF இடையே சமரச ஒப்பந்தம்
- கேணல் கிட்டு உள்ளிட்ட 10 வீரவேங்கைகளின் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி – நெதர்லாந்து
- ரஷ்யாவை 6.4 ரிக்டர் அளவுகோலில் தாக்கிய நிலநடுக்கம்
- தமிழர் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி, யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் கையெழுத்து போராட்டம்.
- HMRC – 2026: அவர்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கு முன் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை