ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு பெற்றுள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் அண்மையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கையை சுட்டிக்காட்டி, மனித உரிமைகளுக்கு எதிரான, மிகவும் மோசமான நாடு பாகிஸ்தான் என்று இந்தியா குற்றம்சாட்டியது.

இந் நிலையில்,ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வாகி உள்ளது. இந்த விவரத்தை நியுயார்க்கில் உள்ள ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹரிஷ் வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
ஐ.நா.வில் 2026-28ம் ஆண்டு காலத்திற்கான மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினராக இந்தியா 7வது முறையாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மகத்தான ஆதரவை அளித்த அனைத்து பிரதிநிதிகளுக்கும் நன்றி.
இந்த தேர்வு மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்களுக்காக இந்தியா அளித்து வரும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. பதவி காலத்தில் இதே நோக்கத்தை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம். – இவ்வாறு ஹரிஷ் தமது பதிவில் கூறி உள்ளார்.
- இந்தியாவில் வெளிநாட்டு சொத்துக்களை மறைத்து வைத்திருந்ததாக 25,000 பேருக்கு வரித்துறை நோட்டீஸ்.
- பட்டாசு புகையால் தில்லி திணறுகிறது!
- கர்நாடகாவில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது.
- ”சபரிமலை வளர்ச்சி திட்டங்களுக்கு 1,000 கோடி ரூபாய் செலவிடப்படும்,” என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
- 2026ல் இந்தியாவில் மூன்று புதிய பிராந்திய விமான சேவைகள்
- தீவிர ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை துவம்சம் செய்த நியூசிலாந்து – 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!