மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இஸ்ரேல் – காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது.

தற்போது, போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்த விதிகளை மீறியதாக கூறி, தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டார்.
அதன்படி காசாவில் பல்வேறு இடங்களில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் அக்டோபர் 2023ல் தொடங்கியதில் இருந்து காசாவில் 68,527 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். பின்னர் அதிபர் டிரம்ப் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
- உலகளாவிய AI தவறான பயன்பாட்டுக்கு எதிராக எழும் கண்டனம் — ஆப் ஸ்டோர் நடவடிக்கைக்கான கோரிக்கை அதிகரிப்பு
- தமிழ் பாரம்பரிய பொங்கல் விழா 2026 பெல்ஜியத்தில் நடைபெற்றது.
- HMRC – 2026: அவர்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கு முன் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை
- இடைக்கால அமைதி உடைந்து, காசா மற்றும் மேற்கு கரையில் வன்முறை அதிகரிப்பு
- ஈரானின் விளிம்புநிலை: உயிர்க்கொல்லி அமைதியின்மை, மறைமுகப் போர் மற்றும் பிராந்திய மோதலின் நிழல்
- உக்ரைன் பயணிகள் ரயிலில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்: ஐந்து பேர் பலி
தற்போது மீண்டும் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்க தொடங்கி இருக்கிறது.