32
கொக்குவில் – கலட்டி பகுதியில் வைத்து 13ஆம் திகதி வியாழக்கிழமை 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 20,21 மற்றும் 22 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In
- 🌤️ இலங்கை வானிலை அறிக்கை
- பேன்டோட்டா கடலில் மிதந்த போதைப்பொருள் பொதிகள்.
- இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலத்திற்கே இருக்கும். – இராமநாதன் அர்ச்சுனா
- உலுக்குளம் கிராம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
- சட்டத்தரணி தம்பதி கொலையானது நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ள சந்தர்ப்பத்தில், மிகவும் பாதுகாப்பு மிக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. – ரஜித லக்மால்
- இலங்கையில் ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த கையடக்கத் தொலை பேசியைத் திருடிய நபர் கைது!
You Might Be Interested In