39
மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ், நேற்று (22.11.2025) பிற்பகல் பமுனுகம மற்றும் துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட கடலோரப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் மற்றும் 04 படகுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
பமுனுகம பொலிஸார் 1500 கிலோகிராம் பீடி இலைகளுடன் 02 படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், துங்கல்பிட்டிய பொலிஸாரால் சுமார் 600 கிலோகிராம் பீடி இலைகளுடன் 02 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சோதனை நடவடிக்கைகளின்போது பல சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். சந்தேகநபர்கள் தொடர்பில் துங்கல்பிட்டிய மற்றும் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In
- இலங்கையில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- இலங்கையில் வெளிநாட்டினருக்கான விசா காலம் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இலங்கை மருத்துவர்கள் 23’ம் தேதி முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.
- சட்டத்தரணி தம்பதி கொலையானது நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ள சந்தர்ப்பத்தில், மிகவும் பாதுகாப்பு மிக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. – ரஜித லக்மால்
- கண்டியில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் 5’ம் திகதி புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, சுமார் 15 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
You Might Be Interested In