அமெரிக்கா உருவாக்கிய ஐ.எஸ்.எஸ்., எனப்படும், சர்வதேச விண்வெளி நிலையத்தை தவிர, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும் தனி விண்வெளி நிலையங்களை வைத்திருக்கின்றன.

‘ டியாங்கோங்’ என்று அழைக்கப்படும் சீன விண்வெளி நிலையத்தை ஆய்வு செய்வதற்காக ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீரர்கள் செல்வது வழக்கம்.
அதன்படி, ‘ஷென்சோ — 20’ விண்கலம் வாயிலாக கடந்த மே 3ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று வீரர்கள் பயணம் மேற்கொண்டனர்.
ஆனால், அவர்கள் திரும்பவேண்டிய விண்கலம் சேதமடைந்து பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
- மத்திய கிழக்கு – பதற்றத்தின் விளிம்பில்
- மினியாபொலிஸில் பதற்றம் குறைய வேண்டும் என வலியுறுத்திய ஜே.டி. வான்ஸ்
- கிழக்கு ஆப்பிரிக்க பயணத்தில் பிரான்ஸ்–ஆப்பிரிக்க உறவை மறுவடிவமைக்க முயலும் மக்ரோன்
- கல்ஃப் பிராந்தியத்தில் கனமழை, புயல் காற்று: எச்சரிக்கை நிலையை உயர்த்திய UAE அதிகாரிகள்
- அமெரிக்காவின் பல பகுதிகளை மூடும் பனிப்புயல்: பனி, பனிக்கட்டி, கடும் குளிர் எச்சரிக்கை
- காசா இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இஸ்ரேலும் ஹமாஸும் உடல் பாகங்களைப் பரிமாறிக் கொள்கின்றன.
இதனால், கடந்த 1ம் தேதி, ‘ஷென்சோ — 21’ என்ற விண்கலம் மாற்று ஏற்பாடாக அனுப்பி வைக்கப்பட்டு மூவரும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வரப்பட்டனர்.
‘ஷென்சோ — 21’ விண்கலம் மூன்று வீரர்களை, விண்வெளி நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு மூன்று வீரர்களை பூமிக்கு அழைத்து வந்தது. இதனால், ‘ டியாங்கோங்’ விண்வெளி நிலையத்தில் தற்போது இருக்கும் வீரர்கள் பூமி திரும்புவதற்கு விண்கலம் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதற்கு மாற்று ஏற்பாடாக ஒரே மாதத்தில், ‘ஷென்சோ — 22’ என்ற விண்கலத்தை சீனா உருவாக்கியது.
இந்த விண்கலம், நேற்று ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து, ‘லாங் மார்ச்- 2எப்’ ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.