“இந்தியா யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியாது” என இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: உலகளாவிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு தற்போது சீனாவில் நடைபெறுகிறது. எரிசக்தியைப் பொறுத்தவரை, அமெரிக்கா இறக்குமதியாளராக இருந்து தற்போது ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. அமெரிக்காவும், சீனாவும் உலகின் விதிகளை மாற்றியுள்ளன. அமெரிக்கா மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு உள்ளது.

உலகம் முழுவதும் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியா அமைதியாக இருக்காது. இந்தியா இப்போது தனது பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.இப்போது உலகில் நமது செல்வாக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2014க்கு முன்பு, அத்தகைய சிந்தனை இல்லை. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதை எங்களது நோக்கம். இதற்கு தான் நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்.
தொழில்துறையில் வளர்ச்சியை கொண்டு வர வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும். இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலகளவில் முக்கிய பொறுப்புகளை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியா யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியாது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
- கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 13 நாட்களுக்கு பிறகு கூம்பன்பாறை வழியாக மூணாறுக்கு போக்கு வரத்து துவங்கியது.
- ”சபரிமலை வளர்ச்சி திட்டங்களுக்கு 1,000 கோடி ரூபாய் செலவிடப்படும்,” என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
- சவுக்கு சங்கரின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- வயிற்றில் 10 செ.மீ கத்தரிக்கோல் கண்டெடுக்கப்பட்டது.
- வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைவதால், ஆறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது
- ஜம்முவில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டபோது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.