வெள்ள நிவாரணம், மீட்பு பணிகளில் தோல்வி அடைந்து விட்டதாக மக்களிடம் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன் விரகுல் மன்னிப்பு கோரியுள்ளார்.
தாய்லாந்தில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் 12 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 162 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, சோங்க்லா மாகாணத்தில் மட்டும் 126 பேர் பலியாகி உள்ளனர். 14 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 38 லட்சம் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.
மழை வெள்ளத்தின் போது நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் அரசு நிர்வாகம் முனைப்புடன் செயல்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன் விரகுல் பார்வையிட்டார். அப்போது நிவாரண பணிகளில் குறைபாடுகள் உள்ளன, அரசு நிர்வாகம் அதை சரிவர செய்யவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர் மன்னிப்பு கோரினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டி:
நிவாரண பணிகளில் அரசு நிர்வாகம் தோல்வி அடைந்துவிட்டது. அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அடுத்த வாரத்திற்குள் வழங்கப்படும். அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும். – இவ்வாறு பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் கூறினார்.
- துருக்கியின் குளிர்கால அதிசயம்: சூடான நீரூற்றுகளில் நிம்மதியாக மூழ்கும் எருமைகள் – அரிய காட்சிகள் வைரலாகும்
- ஐரோப்பாவை முடக்கிய பனிப்புயல்: ‘ஸ்டார்ம் கோரெட்டி’ காரணமாக பயணத் தடைகள் தீவிரம்
- மொசாம்பிக்கில் ‘கெசானி’ புயல் நான்கு பேரை பலிகொண்டது; மதகாஸ்கர் சேதத்தை மதிப்பீடு செய்கிறது
- இலங்கை மாற்று தளமாக — ஐசிசி எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பங்களாதேஷ் நிலைப்பாடு தொடர்கிறது
- வெளிநாட்டில் TOEFL தேர்வை எழுத நபரை வாடகைக்கு எடுத்த மாணவிக்கு ஹாங்காங் நீதிமன்றம் சிறைத் தண்டனை
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போக்குவரத்து மையங்கள் மீது தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள்; வளைகுடா பதற்றம் மேலும் தீவிரம்