இந்தப் போட்டியிலும் இந்திய அணி டாஸ் ஜெயிக்காததால், தொடர்ந்து 20வது முறையாக டாஸை தோற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க அணி விளையாடி வருகிறது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.
இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்க அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக 20 போட்டிகளில் இந்திய அணி டாஸ் தோற்றுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால், தென் ஆப்ரிக்காகு கேப்டன் பவுமா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல, கேஷவ் மஹாராஜ் மற்றும் லுங்கி இங்டியும் ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் விளையாடும் தென் ஆப்ரிக்கா, இந்திய அணியை வீழ்த்த போராடும். அதேபோல, டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்க இந்திய அணி வெற்றி பெற முயற்சிக்கும். எனவே, இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
- 2026 T20 உலகக் கோப்பையை தீர்மானிக்கப் போகும் நட்சத்திரங்கள்: கவனிக்க வேண்டிய முன்னணி வீரர்கள்
- இடன் கார்டன்ஸில் இங்கிலாந்தின் துல்லிய வெற்றி: ஸ்காட்லாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- ரஷியா இந்தியாவுக்கு போர்விமான உற்பத்தி தொழில்நுட்பத்தை முழுமையாக மாற்ற ஒப்புதல் வழங்கியது
- திரிவேணி சங்கமத்தில் மகர பௌர்ணமியை முன்னிட்டு, 2.10 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர்.
- ஏர் இந்தியா விமானத்தில் மற்றொரு சிக்கல்; போயிங் 787 விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
- Delhi’s Pollution Crisis Deepens as ₹29 Crore Clean Air Fund Lies Idle