சென்னையில் இன்று (03-12-2025) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 96,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிச.,01) ஆபரண தங்கம் கிராம், 12,070 ரூபாய்க்கும், சவரன், 96,560 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 196 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (டிச.,02) தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் குறைந்து, 12,040 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் குறைந்து, 96,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (டிச.,03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 96,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,060க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.201க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- வங்காள விரிகுடாவில் உருவான ‘தித்வா’ புயல் நாளை மறுநாள் சென்னையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சென்னையில், பிளாஸ்டிக் கழிவு அதிகரிப்பால் கடல் மற்றும் கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
- இன்னும் எத்தனை உயிர்களைப் பறித்தால் திராவிட மாடல் அரசின் தாகம் தீரும்? – தமிழக பாஜ தலைவர்.
- “மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கண்டனம்.” – இபிஎஸ்
- மறுக்கப்படும் உரிமைகள், மறைக்கப்பட்ட வரலாறுகளைப் பேசும் 10 நூல்கள் வெளியீட்டு விழா
- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை, 2004ம் ஆண்டுக்கு பின், இந்திய தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது.