இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி போராடுவோம் என யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு தொடக்கம் நெடுந்தீவு வரையான மீனவ சங்க பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கிறிஸ்ணன் அகிலனை திங்கட்கிழமை (08-12-2025) நேரில் சந்தித்து, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் எமது கடல் வளங்கள் அழிக்கப்படுவதும் , எமது வலைகள் சேதமாக்கப்பட்டு, எமது வாழ்வாதாரத்தை அழிப்பதுடன், பொருளாதார ரீதியாகவும் எமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.
எனவே இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி அவர்களுக்கு எதிராக போராடுவோம்.
- நாடு தழுவிய விவசாயிகள் பேரணி அறிவிப்பு: கன்யாகுமரி–காஷ்மீர் பயணம் தொடங்குகிறது
- “அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, திமுகவின் ஊழல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் நிச்சயமாக பொறுப்பேற்கப்படுவார்கள்” என்று இபிஎஸ் கூறினார்.
- மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பித்தால், இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் – இலங்கை தேர்தல் ஆணையம்
- பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய கேமரா சீனாவில் வாங்கப்பட்டது – NIA
- தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன்படி “ரூ.50 ஆயிரம்” வரை மட்டுமே பொதுமக்கள் பணம் கையில் எடுத்துச் செல்ல முடியும்.
- வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள “தித்வா புயல் இன்று மாலை 5.30 மணிக்குள் வலுவிழக்கும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில், நீரியல்வளத் திணைக்களத்தின் முன்னிருந்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்து மாவட்டச் செயலகம் வரை செல்லவுள்ளோம். அங்கு மாவட்டச் செயலக வாயிலை மூடி எமது போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். அதொரு என தெரிவித்தனர்.