டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் ஏ35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் புளியம்பொக்கனை பாலம் சேதமடைந்திருந்தது.

இதன் காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்து காணப்பட்டது. கடமைகளுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்கள் தொடக்கம் பொது மக்கள் வரை இந்த பாதை ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதனால் கடும் நெருக்கடிக்குள் உள்ளாகினர்.
எனவே இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பாலத்தை புனரமைத்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் வகையில் இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவுக்கு பாலத்தை புனரமைக்கும் பொறுப்பை இலங்கை அரசு வழங்கியிருந்தது.
அதற்கமைவாக கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் குறித்த பாலத்தை புனரமைக்கும் பணியினை ஞாயிற்றுக்கிழமை (07-12-2025) முதல் தொடங்கியிருக்கின்றனர்.
- The De Facto State of Tamil Eelam: A Chronicle of Governance (Pre-2009)
- ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க பல நாடுகளை இணைக்க கேட்டதாக டிரம்ப் கூறுகிறார்
- விஜய்க்கு சீமான் அட்வைஸ்! குற்றச்சமூகமாக மாற்றும் TVK!
- சுவிஸ்லாந்து கருத்தரங்கு – அரசியல்–வரலாற்றுப் பகுப்பாய்வு
- 6.12.2001 அன்று சிறிலங்காப் இராணுவத்துடன் ஏற்பட்ட எதிர்பாராத நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் 24’ம் ஆண்டு வீரவணக்க நாள்
- UTHR மற்றும் Jaffna Monitor: இனவழிப்பு வரலாற்றை திரித்து எழுதும் போலியான மனித உரிமைச் சாயல்கள்