பொங்கல் விழா நிகழ்வுகளைத் தொடர்ந்து, காவியநாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 33ஆம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் உணர்வுபூர்வமாக முன்னேடுக்கப்பட்டது .
நிகழ்வின் ஆரம்பமாக ஈகைச்சுடர் ஏற்றல், அகவணக்கம், வீரமறவர்களின் திருஉருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவித்தல், மலர்வணக்கம் மற்றும் சுடர்வணக்கம் ஆகியவை இடம்பெற்றன.
தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வுகளில் கவிதை, நடன நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் இடம்பிடித்தன. ஆசிரியை சுகி ஆனந் அவர்களின் வழிகாட்டலில் அவர்களின் மாணவர்களின் நடன நிகழ்வும், ஆசிரியை சாமினி கண்ணன் அவர்களின் மாணவிகளின் நடன நிகழ்வும் நடைபெற்றன .
இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடல் (ஒலி வடிவில்) ஒலிக்க, தேசியக் கொடிகள் கையேந்தப் பட்டது. வீரமறவர்களின் வழியில் பயணிப்போம் என்கின்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவடைந்தது.
- கடலடி நிழல் யுத்தம்: நேட்டோ–ரஷ்யா பதற்றம் ஆபத்தான புதிய கட்டத்தில்
- அரசியல் கைதிகள் விவகாரம்: நீதிபதி துரைராஜா தலைமையிலான குழு விசாரிக்கும்!
- அகவை வாழ்த்து – ஜனவரி 13
- புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் 8,000 போலீசார் நாட்டளாவிய பாதுகாப்பு மற்றும் கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அறிவிப்பு
- ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்த செர்னோபில் பாதுகாப்பு கவசம்
- ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்த நாள் 22.04.2000





















