பிரித்தானியாவில் இருந்து மனித உரிமை அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள ஜெனிவா நகரை நோக்கி, தமிழினத்திற்கு நீதி கோரும் மனிதநேய ஈருருளிப் பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

இந்தப் பயணம், தமிழர் சமூகத்தின் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழின அழிப்பு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு சர்வதேச விசாரணை மற்றும் நீதி கோரிக்கையை உலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் மிச்சம் (Mitcham) பகுதியில் இருந்து தொடங்கி, பிரித்தானிய பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 Downing Street வழியாகச் சென்று தனது அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.
பங்கேற்பாளர்கள் அங்கு நின்று அமைதிப் போராட்டம் நடத்தி, பிரசுரங்களை கையளித்திருந்தார்கள் ,பிரித்தானிய அரசாங்கம் தமிழர் நீதிக் கோரிக்கைக்கு உறுதியான ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்த இந்தப் பயணம், கடல் மார்க்கம் வழியாக Netherlands உள்ளிட்ட ஐரோப்பிய பகுதிகளை கடந்து, இறுதியாக ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் மையத்தை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.
- வங்காள விரிகுடாவில் உருவான ‘தித்வா’ புயல் நாளை மறுநாள் சென்னையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் சூறாவளி தித்வாவால் பாதிக்கப்பட்ட 778 வீடுகளுக்கு ரூ.25,000 நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- சுற்றுலாப் பயணிகளின் வருகை 19.8 சதவீதம் சரிவு; இலங்கை மத்திய வங்கி அறிக்கை.
- தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மிதிவண்டிகளின் தரம் குறைவாக இருப்பதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
- மயிலத்தமடு–மாதவணை கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம்: மூன்றாவது ஆண்டில் தொடரும் அவலம் மற்றும் ஆக்கிரமிப்பின் விளைவுகள்
- காவிய நாயகன் தளபதி கேணல் கிட்டு உட்பட வீரமறவர்களின் நினைவெழுச்சி நிகழ்வு – நோர்வே