மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகளினால் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கையின் அறுவடை விழா நேற்று வியாழக்கிழமை (05-03-2026) காலை சிறைச்சாலை அத்தியட்சகர் அசித குணதிலக தலைமையில் நடைபெற்றது.
சிறைச்சாலைக்குச் சொந்தமான திருப்பெருந்துறையிலுள்ள திறந்த வெளிச்சிறைச்சாலை காணியில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இவ் வேளான்மை செய்கை பண்ணப்பட்டிருந்தது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் விதைப்புச் செய்யப்பட்ட இச்செய்கையின் மூலம் ஏக்கர் ஒன்றிற்கு 15 மூடைகள் எதிர்பார்க்கப்படுவதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.
இயற்கை முறையில் செய்கை பண்ணப்பட்டிருந்த குறித்த நெற்செய்கை சிறந்த விளைச்சலைத் தந்திருப்பதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.
- தவெக வின் சாக்கடை அரசியல்!
- உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- இலங்கையின் கண்டி கிரிந்த பகுதியில் சுமார் 300 கிலோ போதைப்பொருளுடன் 6 பேர் கைது!
- ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசு உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
- “இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல எந்த அரசும் தயாராக இல்லை” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் நாளை (07.11.2025) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து இவ்வேளான்மை அறுவடை விழா இடம் பெற்றது.
சிறைச்சாலை பிரதம ஜெயிலர் எஸ்.ரத்நாயக்கா உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் மாவட்ட கமத்தொழில் அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள்,மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.