நேற்று காலை 8.30 மணியளவில் சரசாலை – கனகம்புளியடிப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புத்தூரிலிருந்து மீசாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்து இடம்பெற்ற போது முச்சக்கர வண்டியில் நால்வர் பயணித்துள்ளனர். இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், முச்சக்கர வண்டியின் சாரதியும், அதிலிருந்த மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து டிப்பர் வாகனத்தின் சாரதி சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- அகவை வாழ்த்து | 14 பிப்ரவரி
- “மாவீரர் லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்)னின் தந்தை” பொன்னுத்துரை சோதிலிங்கம் | புகழ் வணக்கம் | 08.10.2025
- மட்டக்களப்பில் இரண்டு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- நினைவு வணக்கம் – செப்டம்பர் 11
- லெப்.கேணல் துருபதன் | 11.10.2006
- இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.