Home செய்திகள்இலங்கைபாதுகாப்பற்ற முறையில் தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்ததில் 6 வயது சிறுவன் உயிரிழந்தான்.

பாதுகாப்பற்ற முறையில் தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்ததில் 6 வயது சிறுவன் உயிரிழந்தான்.

by Amizhthu

மரதங்கடவல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் அருகிலிருந்த பாதுகாப்பற்ற நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 6 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் மரதங்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொள்ளக்குட்டிகம பகுதியில் செவ்வாய்க்கிழமை (07-04-2026) இரவு மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் நிலையத்திற்குக் கிடைக்கப்பெற்றிருந்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். குறித்த சிறுவன் தனது இரு சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் சிலருடன் இணைந்து, தனது வீட்டிற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றிற்குப் புறாக்களைப் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார்.

இதன்போது, அங்கிருந்த பாதுகாப்பற்ற முறையில் திறந்த நிலையில் காணப்பட்ட, சுமார் 7 அடி ஆழமான நீர் நிரம்பிய குழிக்குள் எதிர்பாராத விதமாக சிறுவன் தவறி வீழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகள் நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் மரதங்கடவல பகுதியைச் சேர்ந்த 6 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து மரதங்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00